சினிமாவை எடுப்பது கூட தற்போது பிரச்சனையில்லை…
ஆனால் அந்த படத்தை பொதுமக்களிடமும் சினிமா ரசிகர்களிடமும் கொண்டு செல்வதுதான் பெரும்பாடாக உள்ளது..
உனக்கு என்ன வேணும் சொல்லு திரைப்பட குழுவினர் ஒரு படி மேலே சென்று… இன்னும் வெளிவராத அவர்களின் திரைப்படத்தின் கிளைமாக்சை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டு அசத்தினர்..
இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்… ஹிப்நாட்டிஸ் தெரப்பி பற்றி புட்டு புட்டு வைத்ததோடு தன் வாழ்க்கையில் ஹிப்நாட்டிஸ் தெரப்பி மூலம் குணமான பெண்ணின் கதையையே இந்த திரைப்படத்தில் வைத்துள்ளதாகவும்… ஏதோ பேய் படம் எடுத்து, நாலு சவுண்ட் மிக்சிங் போட்டு பயமுறுத்துவது மட்டுமே குறிக்கோளாக மற்ற திரைப்படங்களை போல உனக்கு என்ன வேணும் சொல்லு திரைப்படத்தை உருவாக்கவில்லை என்றும்…
இந்த திரைப்படத்தில் அமானுஷ்ய சக்திகளோடு நிறைய சயிண்டிப்பிக்கான நிறைய விஷயங்களை திரைப்படம் வாயிலாக பொதுமக்களுக்கு தெளிவாக சொல்லியுள்ளோம் என்கின்றார் இயக்குனர் ஸ்ரீநாம் ராமலிங்கம்.
பத்திரிக்கையாளர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளித்தார்… அதை விட சினிமா கிராப்ட் தெரிந்தவரராக இருப்பதால் டிரைலர் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசனை தெரிகின்றது.
தான் இதுவரை ஹாரர் ஜானரில் மட்டுமே திரைப்படத்தை எடுத்தள்ளதாகவும் இந்த படம் நிச்சயம் எங்கள் திரைப்படகுழுவினருக்கு வெற்றியை பெற்றுதரும் என்று நம்புவதாக மேலும் தெரிவித்தார்…
உனக்கு என்ன வேணும் சொல்லு திரைப்படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையை முத்தமிட உள்ளது குறிப்பிடதக்கது.
============
Unakkenna venum sollu -climax revealed and shown 7 days before release