Masala Padam trailer & audio launch

unnamed (2)

 

புதுசா  ஒரு டிரெண்டு பார்ம் ஆகி இருக்கு சார்..  விமர்சனம்ன்ற பேர்ல தப்பு தப்பா எழுதி அதையே  விளம்பரமாக்கிடறாங்க…

உங்களுக்கு பிடிக்கறது  போல படம் எடுத்தா… அதுக்கு பேரு படம் இல்லை செல்பி என்று டிரைலர் ஆரம்பிக்கும் போதே  இணையதள விமர்சகர்களை முன் வைத்து  மசாலா படத்தின் டிரைலர் ஆரம்பிக்கின்றது..

அதை விட திரைப்படம் எடுப்பவன் இயக்குனர் அல்ல…  அவன் மேஜிக்   செய்பவனை போன்றவன்… பொய்யை உண்மை போல நம்ப வைப்பன் என்று  காட் பாதர் இயக்குனர்  பிரான்சிஸ் போர்டு கொப்லா சொன்னதையெல்லாம் நினைவு படுத்தியிருக்கின்றார்கள்…

படையப்பா படத்துல  ரஜினிக்கு சிவாஜிக்கு அப்பா… ஒரு படத்தை பத்தி விமர்சனம்  பண்றது அவ்வளவு பெரிய தப்பா?

 

எனக்கு 120 முக்கியம்… அப்படித்தான் கேப்பேன் கலாய்ப்பேன் என்று பண்பலை ஆர்ஜேக்கள்  சொல்லும் விமர்சனங்கள் என்று எல்லா விமர்சகர்களையும் வரிசைபடுத்தியிருக்கிறார்கள்.

 

இன்றைக்கு இணையதளத்தில் ஒரு திரைப்படம் வெளியானால்  விமர்சனம் என்ற பெயரில்  சகட்டுமேனிக்கு இணைய தளங்களில் வெளியாகும்  விமர்சனங்களையும் விமர்சகர்களையும் மசாலாபடம்   ஒரு கை பார்த்தாலும்…

இந்த திரைப்படத்தின் இயக்குனர்  லக்ஷ்மன் மசாலா திரைப்படம்  டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது…

unnamed

இது இணையதள விமர்சகர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என்றும்…இப்போதைய  விமர்சன போக்கு குறித்து மசாலா திரைப்படத்தில் அலசிஇருக்கின்றோம்  என்று  நன்றி தெரிவிக்கையில் பேசினார்..

 

இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா பேசுகையில் மசாலா திரைப்படத்தில் கதையே இல்லை என்றும்.. சின்ன கான்செப்ட்டை வைத்துக்கொண்டு பரபரப்பான ஒரு திரைப்படத்தை இயக்குனர் லக்ஷமன்இயக்கி இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

 

எது எப்படியாக இருந்தாலும்…

 

மசாலா படம் வெளியாகும் போது இன்றைய விமர்சகர்கள்  படத்தை எந்த  மாதிரியான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பது முழு திரைப்படத்தையும் பார்க்கும் போது தெரிந்து விடும்.

மசாலா படத்தின் டிரைலர்.