Thani Oruvan Thanks Meet Event

 

unnamed

தனி ஒருவன் சக்சஸ் மீட்… நெகிழ்ச்சியின் உச்சம்.

என்னதான்  வெற்றி படமாக கொடுத்தாலும் ரீமேக் ராஜா என்ற   அடைமொழியை  உடைக்க படாது  பாடு பட்டுத்தான் போனார்.. தற்போதைய  மோகன் ராஜா…

எடுத்த ஒரு சில படங்களை தவிர   மற்ற எல்லா படங்களும் வெற்றிப்படங்கள்… ஆனாலும் இது  நான் பெற்றெடுத்த வார்ப்பு என்று நெஞ்சு  நிமிர்த்தி சொல்லமுடியாத வலி அவர் மனதில் இருந்து இருக்க வேண்டும்…

இந்த அளவுக்கு ராஜா நெகிழ்ந்து உடைந்து பேசியதில்லை… பொதுவான இந்த படத்தில் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறேன்.. அதனால்  இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பத்தோடு பதினொன்றாக  சுரத்தையில்லாமல் பேசி விட்டு  செல்வார்…

காரணம் என்ன பேசினாலும்… அந்த கதையை வேறு ஒருவர்  தெலுங்கில் எடுத்து வெற்றிக்கொடி நாட்டிய கதை… அந்தக்கதையை தமிழில் செய்தால் எப்படி காலரை தூக்கி விட்டுக்கொள்ள முடியும்.. நிச்சயம் அந்த  வேதனை மனதில்  கண்டிப்பாய் சுமந்து இருந்து இருப்பார் என்பதைதான் தனி ஒருவன் சக்சஸ் மீட்டில்  பொங்கி உணர்ச்சிபிரவாகமாய் ஆகி விட்டார்…

 

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டவனுக்கு உண்மையான  வெற்றியின் ருசியை  தனிஒருவன் கொடுத்து விட நெகிழ்ந்துதான் போனார்.. நிச்சயமாக டைரக்டராக   இருந்ததற்கு பெருமை படுத்திய திரைப்படம் தனி ஒருவன்தான்…

நான் பார்ன் இன் சில்வர் ஸ்பூன்… எனக்கு எல்லாமே  கிடைத்தது … ஆனால்  உண்மையான  வெற்றியின் ருசியை சுவைக்க இத்தனை ஆண்டுகள்  காத்திருக்க வேண்டியதாயிற்று என்று ராஜா  உடைந்து பேச,.. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்  ஜெயம் ரவி… அவரும் மேடையில் உடைந்து போனார்…

ரவி பேச வருகையில்  பத்திரிக்கையாளர்கள் நல்ல திரைப்படங்களை  கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பது தனி ஒருவன் மூலம் நான்  கற்றுக்கொண்ட் பாடம் என்றார்…

தன் அண்ணின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடியதும், தன் தம்பியின் வெற்றியை  தன்  வெற்றியாக கொண்டாடியதையும் நெகிழ்ந்து போய் கண் கலங்கியதும் பார்க்க  ஆனந்தமாக இருந்தது…

 

இன்னும் பல வெற்றிகளை பெற ஜாக்கிசினிமாஸ் சார்பாக ஜெயம் சகோதரார்களை வாழ்த்துவோம்.