Veera Pandiya Katta Bomman Official Trailer

mail.google.com1

புதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலு அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.