Chennai | Paramotor First time in Tamilnadu by Aero Sports | ECR Road

Untitled

பாரா மோட்டர்….

ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து வியந்து வந்த பாராமோட்டர் விளையாட்டு தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது..
சரி…. பாராமோட்டர் என்றால் என்ன?,
பராசூட்டை கொஞ்சம் உயரமான மலையில் இருந்து குதித்து பறப்பதற்கு பாரா கிளைடிங் என்று பெயர்.
1952 இல் ஆரம்பித்த பாரா கிளைடிங் மேலை நாடுகளில் வெகு பிரபலம்.. அதில் பின் பக்கம் மோட்டர் பொருத்தி, பறக்க வேண்டிய பாரா சூட்டுக்கு உந்து சக்தி அளித்தால் அது பாரா மோட்டர் ஆகும்…

பாலவாக்கத்தில் உள்ள மணிக்கண்ணன் மூலம் இந்த பராமோட்டர் விளையாட்டு சென்னையில் கால் பதித்துள்ளது..
பேராமோட்டரை பவர்டு பாரா கிளைடர் ppG என்றும் அழைப்பர்…

இதன் எரிபொருள் கொள்ளளவு… 3,7 லிட்டர் .. மைக்பிரேயன் என்ற பிரிட்டிஷ்காரர் 1980 இல் இதனை வடிவமைத்தாலும் பிரான்சில் கூடுதல் உந்து சக்தி சேர்த்து 1986 இல் பாராமோட்டார் வேகு பிரபலமானாது. 18,000 அடி உயரமும் 500 அடிக்கு குறைவாகவும் இதில் பறக்க முடியும்.

பர்ஸ்ட் எலக்ட்ரிகல் பாராமோட்டர் 2006 இல் அறிமுக்ப்படுத்தப்பட்டது. விமானம் தரையிரங்க முடியாத மலைபகுதியில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தரையிரக்க பாராமோட்டரை உலக நாடுகள் பயண்படுத்துகின்றன.

1991 ஆம் ஆண்டு ஜாக்கிசான் நடித்து இயக்கிய ஆர்மர் ஆப் காட் திரைப்டத்தின் இரண்டாம்பாகமான ஆப்பரேஷன் காண்டர் திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே ஜாக்கிசான் ஒரு மலை சிகரத்தை அடைய பாராமோட்டர் உபயோகப்படுத்தி இருப்பார்…
அந்த பாராமோட்டர் சென்னையில் கால் பதிக்க 25 வருடம் ஆகியிருக்கிற்து…. இந்த பாரா மோட்டர் இப்போதோவது சென்னையில் கால் பதித்து இருக்கின்றதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்..
ஆம் சென்னையில் சனி ஞாயிறு நாட்களில் மகாபலிபுரம் கடற்கரை சாலையில் கடற்கறையோரம் புவி யீர்ப்பு திசைக்கு எதிராக ,பாராசூட்டு போல ஆனால் சத்தம் போட்டு பறக்கும் இந்த வினோத பராசூட்டை பார்த்து, அந்த பக்கம் போகும் தமிழ் நாட்டு பொது ஜனங்கள் வாய் பிளந்து வியந்து போகாமல் அந்த பக்கத்தை கடக்க முடியாது…

பேரா மோட்டரில் இருவர் மட்டுமே பயணிக்க இயலும்.. ஒருவர் பைலட் மற்றவர் பயணி…
பெரா மோட்டரில் ஒருவர் ஜாலியாக பயணம் செய்ய… 2500 ரூபாய் செலவாகின்றது. ஆனால் ஒரு பத்து பேர் கொண்ட நண்பர்கள் குழு பறக்க ஆசைப்பட்டால் அதன் விலை ரொம்பவும் குறைவு..

பாஸ் போர்ட் இல்லாமல் சொந்த மண்ணில் புவியீர்ப்பு திசைக்கு எதிராக பயணித்து , வங்காள விரிகுடா கடலின் அழகை கண்டு ரசிக்க ,சிப் அண்டு பெஸ்ட் திரில்லர் இந்த பாராமோட்டடார் விளையாட்டு ..

சென்னைவாசிகள் பாராமோட்டர் ஜாலி ரெய்டை மிஸ் பண்ணிடாதிங்க…

ஆவணப்படமாக உங்கள் கண்முன்…

Paramotor first time in chennai and also in Tamilnadu by Aero Sports in Pallavakkam East Coast Road. The Joy Ride is on the weekends in the ECR at a very minimal cost. An experience of flying can be now at ease. Adventurous and Thrill and action lovers will enjoy this.

Voice over: Sureka Hemachandran

Music : you tube free music track

Runaways 3:04 Silent Partner Country & Folk | Inspirational

Script/Cinematography/Editing & Direction: Jackiesekar

Home

https://www.facebook.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas

=============