Mission: Impossible – Rogue Nation -2015 movie review |மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்

Mission-Impossible-Rogue-Nation-Poster

மிஷின் இம்பாசிபிள் 5

மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது…
மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை…

பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை..

கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்..

ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா??? அதனால் அந்த ஏற்பாடு.. ஆனால் இன்று தமிழ் டப்பிங்கிள் ஆங்கில படங்கள் உலகமெங்கும் வெளியாகும் அதே தினத்தில் வெளிவர ஆரம்பித்து விட்டன. எல்லாம் டிஜிட்டல் தொழில் நுட்பம் செய்த மாயம்… அதே போல இரண்டாம் பாகம் வந்த போதுதான் டிடிஎஸ் சவுன்ட் சிஸ்ட்டம் தமிழ் நாட்டில் கால் பதித்த நேரம்… பழைய நினைவுகள் …. லெட் மி கம் டூ த பாயிண்ட்.

======
மிஷின்இம்பாசிபிள் திரைப் படத்தின் கதை என்ன???

சின்டிகேட் என்ற அமைப்பு நாசகார வேலைகள் உலகம் எங்கும் செய்து வருகின்றன..சிஐஏ அப்படி ஒரு அமைப்பே இல்லை என்று நினைக்கிறது… ஆனால் ஈத்தன்… (டாம்குருஸ்) கண்டிப்பாக சின்டிகேட் அமைப்பு இருக்கின்றது… என்பதை கொஞ்சம் ஆதரங்களோடு வைத்துக்கொண்டு நம்புகின்றார்.. அந்த அமைப்பை அவர் எப்படி கண்டு பிடித்து முறியடித்தார் என்பதுதான் மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தின் கதை.
============
டாம்குருஸ்சுக்கு 53 வயது ஆகின்றதாம் நம்பவே முடியவில்லை.. மனிதர் ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகின்றார்.. முக்கியமாக ஆம்ஸ்புடைப்போடு அவர் சட்டையில்லா காட்சிகளில் பொறாமை கொள்ள செய்கின்றார்.
unnamed (5)

ஜெர்மி ரென்னர் மற்றும் சைமன் பிக் அவர்களுடைய பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்.. முக்கியமாக சைமன் பிக்… அசத்துகின்றார்… அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ்ச்சிபடுத்துகின்றார்.

maxresdefault

பிரிட்டன் பிரதமரையே ஹோமோ போல பிளாக் காமெடி செய்ய அமெரிக்கர்களை விட்டால் வேறு யாரும் இவ்வளவு போல்டாக காட்சி அமைக்கமாட்டார்கள்…rebecca-ferguson-actress

படத்தின் பெரிய பலமே.. ரெபெக்க பெர்கூசன்தான்.. இவர் ஸ்வீட்ன் நாட்டுக்காரர்.. டாம்குருசுக்கு டப் பைட்கொடுப்பது இவர்தான்… சான்சே இல்லை.. அதுவும்.. அந்த நீச்சல் குள காட்சியில் அசத்துகின்றார்..

அதே போல படத்தின் முதலில் இசைத்தட்டு கடையில் வரும் அந்த ஏஜென்ட் பிகர்தான் படம் நெடுகிலும் வந்து நம்மை பரவசப்படுத்த போகின்றார் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது நம் எண்ணத்தில் தீ வைத்ததோடு அந்த பெண்ணை மண்டையில் சுட்டு சாகடுத்து விடுகின்றார்… இயக்குனர் கிரிஸ்டோபர்.. போய்யா… என்ன ரசனைய்யா..?? உனக்கு,.??

படத்துக்கு பெரிய பலம் ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவும், எட்டி ஹமிங்டன் எடிட்டிங்கம்தான்.. பைக் சேசிங் காட்சியில் எடிட்டருக்கு நிச்சயம் பெண்டு கழண்டுஇருக்கும்..

=====
படத்தின் டிரைலர்..

===
படக்குழுவினர் விபரம்.

Directed by Christopher McQuarrie
Produced by
J. J. Abrams
Bryan Burk
Tom Cruise
David Ellison
Dana Goldberg
Don Granger
Screenplay by Christopher McQuarrie
Story by
Christopher McQuarrie
Drew Pearce
Based on Mission: Impossible
by Bruce Geller
Starring
Tom Cruise
Jeremy Renner
Simon Pegg
Rebecca Ferguson
Ving Rhames
Sean Harris
Alec Baldwin
Music by Joe Kraemer
Cinematography Robert Elswit
Edited by Eddie Hamilton
Production
companies
Bad Robot Productions
Skydance Productions
TC Productions
Distributed by Paramount Pictures
Release dates
July 23, 2015 (Austria)
July 31, 2015 (Unites States)
Running time
131 minutes[1]
Country United States
Language English
=
பைனல்கிக்..
கண்டிப்பாக ஆக்ஷன் ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்…. அது மட்டுமல்ல… கண்டிப்பாக தமிழில் பார்த்து ரசிக்கவும்… மிக அழகாக உறுத்தல் இல்லாத டப்பிங்… டப்பிங் மற்றும் சப் டைட்டில் செய்த குழுவிற்கு ஜாக்கி சினிமாஸ் சார்பாக நன்றிகளும் வாழ்த்தும்..
அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது.

==
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு எட்டு.

=

மிஷின் இம்பாசிபிள் வீடியோ விம்ர்சனம்.