Mission Impossible -5

unnamed (2)

டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு இயக்குனரின் படைப்பு ஆக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் டாம் க்ரூஸ். அவ்வகையில், இரத்தத்தை உறைய வைக்கும் Action காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்க வைக்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகத்தை கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ளார்.

“ மிஷன் இம்பாசிபிளின் இப்பாகத்தை இயக்குவது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. கதாநாயகன் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்திற்கு இணையாக படத்தில் இருக்கும் அனைவருக்கும் முக்கித்துவம் தரும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். மேலும், ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு சவால் விடும் வகையில் இல்சா ஃபாஸ்ட் என்ற கதாப்பாத்திரம் அமைத்திருக்கிறோம். முந்தைய பாகங்களில் முக்கிய பாத்திரங்களில்தான் ஒரு பெண் நடிகர் வருவார். இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ படத்தில் கதாநாயகியாக இல்சா ஃபாஸ்ட் கதாப்பாத்திரம் இருக்கும்.”

“ பயங்கரவாத கும்பலைத்தேடி IMFன் அடுத்த இலக்கு என ‘கோஸ்ட் புராட்டக்கால்’ படத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு ‘முரட்டு தேசம்’ எடுக்கப்பட்டுள்ளது.” எனக் கூறுகிறார் இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி.

இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி பற்றி கதாநாயகன் டாம் க்ரூஸ் கூறுகையில்“ கிரிஸ் ஒரு அற்புதமான படைப்பாளி, அவரது திரைக்கதை அமைப்பு என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் சிறந்ததாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே எனக்கும் கிரிஸிற்கும் இருக்கும் பெரும் ஒற்றுமை” என்றார்.