ithu enna maayam-2015 movie Review | இது என்ன மாயம் திரைவிமர்சனம்.

jk

இது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்… ஜாலியான காதல் சப்ஜெக்ட்..
======

இது என்ன மாயம் திரைப்படத்தின் கதை என்ன??

நண்பர்களான விக்ரம் பிரபு, ஆர்ஜே பாலாஜி, பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் நாடக நடிகர்கள்… நாடகத்துக்கு மவுசு குறைந்து வரும் நிலையில்…. உண்மையான காதலை ஒன்று சேர்க்க ரியல் லைப்புல நாடகம் போடுகின்றார்கள்… அதில் நிறைய காதல்களை சேர்த்து வைக்கின்றார்கள்… ஒரு ஏஜென்சி போல வைத்து நடத்துவதால் நிறைய ஆபர்கள் அவர்கள் வசம் வருகின்றன…

பெரிய பில்டரான நவ்திப் தன்னை ஒரு மாயா ( கீர்த்திசுரேஷ்)என்ற பெண்ணோடு சேர்த்து வைக்க சொல்கிறார். ஆனால் விக்ரம் பிரபுவுக்கு நவ்திப் சொன்ன பெண்… விக்ரம் பிரபுவின் முன்னால் காதலி… ஏன் பிரிந்தார்கள்..? நவ்திப் காதல் என்னவானாது? விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் காதல் கை கூடியதா இல்லையா போன்ற சமாச்சாரங்களை வெண்திரையில் பார்த்து ரசிக்கவும்…
=======

நம்ம ஹீரோ விக்ரம் பிரபுவின் 6 வது திரைப்படம் இது என்ன மாயம்… அது என்ன நம்ம ஹீரோ.. சிகரம் தொடு திரைப்படத்துல அவரோடு ஒரு சீன் நடிச்சி இருக்கோம் இல்லை… அதனால நம்ம ஹீரோ விக்ரம் பிரபு நடித்து இருக்கும் ஆறாவது திரைப்படம்.. கும்கியில் இருந்து விக்ரம் பிரபு கவனிச்சா நிறைய மாறிக்கிட்டு வருவது நன்கு தெரியும்..

இந்த படத்துல சாமிங்கா இருக்கார்…. அதுவும் கொச்சின் போர்ஷன்ல சும்மா மிளிர்கின்றார்…. கீர்த்தி சுரேஷ் செம சார்மிங்கா அழகா இருக்கார்.. இன்னும் ஒரு பெரிய ரவுண்ட் தமிழ்ல வரும் வாய்ப்பு அதிகம். அதுவும் சிரிச்சா… கோல்கேட் புன்னகை பூக்கின்றார்.. ஆனால் நிறைய பிரேம்களில் பல் ஈறுகள் தெரிய சிரித்துக்கொண்டே இருப்பது போன்ற பிரம்மை… நோட் பண்ணிக்கோங்க மேடம்..

முதல் பாதியில் காதலுக்காக உதவும் நாடக தனங்கள் ட்ருமேன் ஷோ திரைப்படத்தை படம் பார்க்கும் போது நியாபகப்படுத்துகின்றன… ஆனாலும் அந்த போர்ஷன் ரசிக்க வைக்கின்றன…. அதே போல படத்தில் நடித்த பெண் சின்ன சின்ன கதாபாத்திர பெண்கள் கூட லட்டு போல அழகாக இருக்கின்றார்கள்…

பின்பாதியில் விக்ரம் பிரபு காதலை தடுக்க நினைக்க செய்ய முயற்சிகள் கொஞ்சம் அயற்சியை தருகின்றது என்பதே உண்மை.
சார்லி ரொம்ப நாளைக்கு பிறகு வெண்திரையில்.. பாபநாசத்திற்கு பிறகு இந்த படம்.. மிக மிக திறமையான நடிகர்… அவரை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பயண்படுத்திக்கொள்ளவில்லை என்பதில் வருத்தமே… வெற்றிக்கொடி கட்டு படம் பார்த்தவர்களுக்கு அவர் நடிப்பும் உடல் மொழியும் மறக்கவே முடியாது.
download

இயக்குனர் விஜய்….ஐயம் சாம் போல இது என்ன மாயம் திரைப்படத்தையும்…. 2010 இல் வெளியான கொரிய திரைப்படமான cyrono agency திரைப்படத்தின் கருவினை கபளீகரம் செய்து..… கொஞ்சம் நகாசு வேலை செய்து தமிழுக்கு ஏற்றது போல பட்டி டிங்கரிங் பார்த்து … ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா துணையுடன் கொஞ்சம் ரசிக்கவே செய்து இருக்கின்றார்…

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்… முக்கியமாக காலேஜ் கல்சுரலில் கீர்த்தி சுரேஷ் பாடலும் ஒளிப்பதிவும் அருமை… கோல்கேட் விளம்பர பாடல் போலவே இருந்தது சிறப்பு.

=====
படத்தின் டிரைலர்.

=====
படக்குழுவினர் விபரம்

Directed by A. L. Vijay
Produced by R. Sarathkumar
Raadhika Sarathkumar
Listin Stephen
Written by A. L. Vijay
Starring Vikram Prabhu
Keerthy Suresh
Kavya Shetty
Music by G. V. Prakash Kumar
Cinematography Nirav Shah
Edited by Anthony
Production
company
Think Big Studios
Magic Frames
Release dates
July 31, 2015[1]
Country India
Language Tamil

=====
பைனல் கிக்..
கொரிய படத்தின் நகல் இந்த திரைப்படம் என்றாலும் முதல் பாதி கண்டிப்பாக ரசிக்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை… முக்கியமாக கீர்த்தி சுரேஷை ரசிக்கவே இந்த படத்தை பார்க்கலாம்.. ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம்…. கொச்சியின் ஹாக்கி போர்ஷன், கீர்த்தி போர்ஷன் செமை.. கண்டிப்பாக காதலர்கள் ஒரு முறை இந்த படத்தை கண்டிப்பாக ரசிக்கலாம்.. சீயூ என்று சொல்லும் போது எப்ப என்று கேட்பது கியூட்..
======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறு.
=====

இது என்ன மாயம் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம்.