ar rahman music to director priyadharshan new film???

artist_23754

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் THINK BIG STUDIOS சார்பில் தயாராகும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது ” எனது குரு பிரியதர்ஷன் சார் அவர்களின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம்.

சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொணரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் சார் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

darshan1
முழு படபிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ரஹ்மான் சாருக்கு காண்பிக்க இருக்கிறோம்.

படத்தை பார்த்த பிறகு ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு பிடித்திருந்தால் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பார். பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் மற்றும் ஸ்ரியா ரெட்டி ஆகியோரது நடிப்பின் பெரும் பங்கும், திறன் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பிரியதர்ஷன் அவர்களின் காட்சிகளுக்கு பேருதவியாய் இருக்கும் “எனக் கூறினார்