CSK Tamil Movie Review |சிஎஸ்கே கவனிக்க வேண்டிய தமிழ் படம்.

11043284_450910618406768_8786984363161482881_o

சிஎஸ்கே திரைப்படத்தை நான் பார்க்கவில்லை..பட் எனது மாணவன் கார்த்திக் வீரா இந்த படத்தை பற்றி சிலாகித்து எழுதியதால் இந்த திரைப்படத்தை பார்த்தேன். காரணம் தெலுங்கு படங்களையே பார்க்காத என்னை தெலுங்கு படங்கள் பார்க்க வைத்தவன்..

2005 ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் அனுக்க குண்டே ஒக்க ரோஜூ என்று ஒரு தெலுங்கு படம் சார்மி நாயகியாக நடித்து வெளி வந்தது. அந்த படத்தை போய் பாருங்கள் சார் என்று எனக்கு அறிமுகப்படுத்தியவன் அவன்… அந்த படம் மிக அற்புதமான தெலுங்கு திரில்லர் என்றால் அது மிகையில்லை… இதுவரை பார்க்காதவர்கள் அந்த படத்தை பார்த்து விடுங்கள்.

அதன் பின் அவன் பரிந்துரைக்கும் படங்கள் அத்தனையையும் நான் பார்த்து விடுவேன்… சில தினங்களுக்கு மூன் சிஎஸ்கே திரைப்படத்தை பற்றி பேஸ்புக்கில் சிலாகித்து எழுதி இருந்தான்.

அதனால் அந்த படத்தை நேற்று இரவு பார்த்தேன்… லோ பட்ஜெட்டில் மிக அற்புதமான மேங்கிங் என்றே சொல்ல வேண்டும்…
கோடி கோடியாக நாயகனுக்கு இசையமைப்பாளர்களுக்கும் கொட்டி கொடுத்து படோபடமான விளம்பரங்கள் செய்தும் தோற்றுபோன திரைப்படங்களுக்கு மத்தியில் லோ பட்ஜெட்டில் நம்பிக்கையோடு அருமையான மேங்கிங்கில் அசத்தும் இது போன்ற திரைப்படங்களை அவசியம் பாராட்ட வேண்டும் என்பது என் எண்ணம்..

இயக்குனர் ராதா மோகனின் சிஷ்யபிள்ளை…. சத்திய மூர்த்தி முதல் பாதியில் அருமையான ஒரு திரில்லரை அவர் டிரை செய்து இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

சார்லஸ், ஷபிக், கார்த்திகா மூவரின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்தான் கதை… அவர்கள் ஒரு புள்ளியில் சேர்க்கும் திரைக்கதை அவர்கள் பிரச்சனைகள் சரியானதா ?இல்லையா என்பதுதான் படத்தின் கதை…

முதல் பாதியில் காட்டிய விறு விறுப்பையும் சீன்களையும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் யோசித்து இருந்தால்… அல்லது பட்ஜெட் உதவி இருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம் அடுத்த தளத்துக்கு சென்று இருக்கும் என்பது என் எண்ணம்…

இன்டவர்வெல்லுக்கு பிறகு லிப்ட் கேட்பவர் எதிரில் ஷபிக்கை தைக்க துண்டை காணோம் துணியை கானோம் என ஓடும் அந்தகாட்சி அருமை… அதே போல வசனங்கள் பளிச்…

கேமரா கண்ணுல ஒத்திக்கலாம்,… சான்சே இல்ல.. அதுவும் அந்த பர்ஸ்ட் சாங்… திருச்செந்தூர் இவ்வளவு அழகா ??? கவிதை போங்க…
கேமராமேன்கள்… ஸ்ரீசரவணன், மனோகரன்… அசத்தி இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்..

சிஎஸ்கே திரைப்படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…. லோ பட்ஜெட்டில் அசத்தியமைக்கு… இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்…

வாழ்த்துகள் சிஎஸ்கே குழுவினருக்கு.

ஜாக்கிசேகர்
ஜாக்கிசினிமாஸ்
25/06/2015