The Salvation சொல்லி சொல்லி சலித்து, போன பழிக்கு பழி வாங்கும் கதைதான்…உலகில் ஒவ்வோருவரும் யாரோ ஒருவரால் பாதிப்பு அடைந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்… ஆனால் பாதிப்புக்கு என்று ஒரு அளவுகோல் என்று உண்டு அல்லவா?
பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றேன் என்று வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்பதற்க எல்லாம் கத்தி எடுத்துக்கொண்டு போய் கழுத்தை அறுக்கபோவதில்லை… மிஞ்சி மிஞ்சி போனா நாதாரி நாயே நீ உருப்பட மாட்டே என்று சொல்லி விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விடுவோம்..
ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் குடும்பத்தினோருடு… ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் சின்ன இடத்தில் வாழ்க்கையை ரம்யமாக எதிர்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இவ்வளவுநாள் பிரிந்து இருந்த மனைவி மகனை முதல் முறையாக ரயில் நிலையத்தில் சந்திக்கின்றான்..
குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு மனைவி மகனை அழைத்துக்கொண்டு செல்லும் போது அதே வண்டியில் இரண்டு குடிகார ரவுடிகள் ஏறுகின்றார்கள்.. முதலில் அமைதியாக இருக்கும் அவர்கள் குதிரை வண்டி ஊருக்கு ஒதுக்கு புறமான பாதையில் செல்லும் போது துப்பாக்கி முனையில் மகன் கொலை செய்யப்படுகின்றான்.. மனைவி கற்பழிக்க படுகின்றாள்…..
வெறியோடு துரத்தி மகனை கொன்ற, மனைவியை கற்பழித்த இரண்டு ரவுடிகளையும் சுட்டு சாகடித்து விடுகின்றான்… ஆனால் இத்தோடு படம் முடிந்து விட்டதாக அல்லவா நினைத்தீர்கள்.. அதான் இல்லை..
சுட்டு சாகடிக்கப்பட்ட ரவுடிகளில் ஒருவன்.. பெரிய கொள்ளை கூட்டத்தலைவனின் தம்பி…. அவன் ஒரு சிற்றரசன் போல அருகாமை ஊர்களில் இருக்கும் வீடுகளில் வரிவசூல் செய்து மிரட்டி பிழைத்து வருகின்றான்…
அவன் கொடுரமானவன்…
இரக்கமில்லாதவன்..
தன் தம்பி செத்து போனதை தாங்கி கொள்வானா—???
யார் என் தம்பியைகொலை செய்தது என்று அவன் தேட நாயகன் தம்பித்ததானா இல்லையா என்பதே The Salvation படத்தின் கதை.
====
வில்லனாக ஜெப்ரி டீன் மார்கன் நடித்துள்ளார்.. நாயகனாக மேட்ஸ்மிக்கல்சன் நடித்துள்ளார்…
அந்த லைட்டான மாறுகண்ணும்… உன்னிப்பாக பார்க்கும் அந்த பார்வையும்… கண் முன்னே மகனை மனைவியை பறிகொடுத்த அந்த வேதனையை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்… ஈவா கிரீன் வில்லனின் தம்பி மனைவியாக நடித்து இருக்கின்றார்…
படத்தை Kristian Levring இயக்கி இருக்கின்றார்.. கவுபாய் படங்கள் நிறைய பார்த்து இருப்பார் போல..
======
படத்தின் டிரைலர்..
=======
படக்குழுவினர் விபரம்.
Directed by Kristian Levring
Produced by Michael Auret
Sisse Graum Jørgensen
Written by Kristian Levring
Anders Thomas Jensen
Starring Mads Mikkelsen
Eva Green
Eric Cantona
Mikael Persbrandt
Jeffrey Dean Morgan
Jonathan Pryce
Michael Raymond-James
Music by Kasper Winding
Cinematography Jens Schlosser
Edited by Pernille Bech Christensen
Production
company
Det Danske Filminstitut
European Film Bonds
Film i Väst
Forward Films
Spier Films
Zentropa Entertainments 33
Distributed by Nordisk Film
United Kingdom:
Warner Bros.
United States:
IFC Films
Release dates
17 May 2014 (Cannes)
22 May 2014 (Denmark)
Running time
92 minutes[1]
Country Denmark
United Kingdom
South Africa
Language English
Danish
Budget €10.5 million
==========
பைனல் கிக்.
படத்தின் சுவாரஸ்யமே 1870களில் நடக்கும் கதை என்பதால் அந்த கால வாழ்க்கை சுவாரஸ்யம். படத்துக்கு பெரும் பலம் ஒளிப்பதிவும் இசையும்தான் என்றால் அது மிகையில்லை..
மனம் குழப்பமாக இருக்கின்றது… நல்ல படங்கள் நிறைய இருக்கின்றது.. ஆனாலும் பார்க்க மூட்இல்லை… பிரிட்ஜை திறந்து ஒரு பீர் எடுத்து அடிக்கலாம் என்றால் வியர்த்து வழியும் அந்த பீர் பாட்டிலை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருப்பது.,.. வேறு எதிலாவது கனவத்தை செலுத்தினால் நல்லது என்று தோன்றும் அந்த கணத்தில்இந்த திரைப்படத்தை பாருங்கள்.. நாட் பேட் கேட்டகிரி..
டைம்பாசிங் என்ற பெயரில் நையப்புடைத்த பழிக்கு பழி வாங்கும் இந்த கதையை தாராளமாக பார்க்கலாம்.
====
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறரை.
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
========
பின்தொடர.
http://www.jackiecinemas.com/
https://www.facebook.com/JackieCinemas
https://plus.google.com/+JackieCinemas
https://www.youtube.com/JackieCinemas