கண்டநாள்முதல் இயக்குனர் பிரியாவின் உதவியாளர் செந்தில்குமார் இயக்கும் வாய்மை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சந்தியம் திரையரங்கில் நடந்தது…
விழாவில் என்னற்ற பிரபலங்கள் கலந்து கொண்டாலும்…. விழாவில் பேசிய இயக்குர் பிரியா… நடிகர் பாண்டியராஜன், பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்… போன்றவர்கள் பேச்சு மனதை நெகிழ்ச்சிபடுத்தியது எனலாம்…
முதலில் பேசிய சாந்தனு விழாவுக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்….
30 வருடங்களுக்கு முன் வந்த நீங்கள் கேட்டவை படத்தில் வந்த பிள்ளை நிலா பாடல் போல இந்த படத்திலும் தான் நடித்து இருப்பதாக சாந்தனு அம்மா பூர்ணிமா தெரிவித்தார்.
டிரைலர் பாடல்கள் ஒளிபரப்பும் போதே… முதலில் பேரறிவாளன் எழுதிய கடிதம் ஒளிபரப்பபட .,.. அனைவர் புருவத்தையும் அந்த கடிதம் உயரசெய்தது என்றே சொல்ல வேண்டும்…
வாய்மை திரைப்படத்தின் இயக்குனர் செந்தில் குமாரின் குருநாதர் பிரியா வாய்மை சிடி வெளியீட்டில் இயக்குனர் முருகதாஸ் வெளியிட….படத்தின் முதல் ஆடியோ சீடியை பெற்றுக்கொண்டதில் இயக்குனர் பிரியா மிகவும் நெகிழ்ந்து போய் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பேசினார்…
பவர் ஸ்டாப் குழுவினரை வாழ்த்தி பேச வந்தாலும் கை தட்டலில் அரங்கம் அதிர்த்தது…
எப்படி பட்ட அப்பவாக இருந்தாலும் கண் எதிரே தன் பிள்ளை தூக்கில் தொங்குவதை பார்த்தால் யாருக்குதான் மனம் கலங்காது… அது சினிமாவாக இருந்தாலும் … ஒரு கணம் மனம் தடுமாறும் அல்ரவா? வாய்மை படத்தின் டிரைலரில் பாண்டியராஜன் மகன் பிருத்திவி சிறைச்சாலையில் தூக்கில் தொங்குவது போல காட்சி அமைத்து இருந்தார்கள்…. அதை பார்த்து விட்டு பாண்டியராஜன் தனது உரையில்…
என் பையன் என்னை கண் கலங்க வச்சதே இல்லை.. ஆனா…. இந்த படத்துல செந்தில் எடுத்த தூக்கு மேடை காட்சியை பார்த்துட்டு என் கண் கலங்கிடுச்சி. அது மட்டுமல்ல.. இந்த படத்துல பாராதிராஜா மகன் மனோஜ் நடிக்கின்றார்… அவரோட சிஷ்யன் பாக்கியராஜ் பையன் சாந்தனு நடிக்கின்றார்….பாக்கியராஜ் சிஷயன் நான்… என்னோட பையன் பிருத்விஇந்த படத்துல நடிக்கின்றார்.. என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
அடுத்து பேச வந்த அற்புதம்மாள் பேச்சு எல்லோரையும் கலங்க வைத்தது.. ஒரு காலத்தில் ஊடகமும் நீதியும் அரசும் எல்லாம் ஒன்று சேர்ந்து குற்றம் செய்யாத தன் மகனை தூக்கு தண்டனை கைதியாக பிரகனபடுத்தியதை மிக நெகிழ்ச்சியாக பதிவு செய்தார்…
விழாவில் பேசிய படத்தில் பங்கு பெற்ற நடிகர்கள் யாரும்மறந்தும் கதையை சொல்லவில்லை.. என்பது குறிப்பிடதக்கது. நேரம் அதிகம் எடுத்துக்கொண்ட காரணத்தால் சத்தியம் தியேட்டரில் உத்தமவில்லன்திரைப்படத்தினை காண வந்த ரசிகர்கள் ரகளை செய்ய… விழா அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது.