Karuppan – Movie Review By Jackiesekar

பி அண்டு சி ஆடியன்ஸ்சுன்னு ஒருத்தன் இருக்கான் ஆப் சோசியல் மீடியா எல்லாம் தெரியாம திரைப்படம் மட்டுமே பொழுது போக்காக கொண்டவனுக்கு இங்கே படம் பண்ண யாரும் இல்லை… ராஜ்கிரன் ராமராஜன் காலத்தோடு முடிந்து போனாலும் சசிக்குமார் அந்த வேலையை சிறப்பாக அவ்வப்போது செய்து வருகின்றார்.. அந்த இடத்துக்கு விஜய் சேதுபதியும் துண்டு போட வந்து இருக்கும் திரைப்படம் இந்த கருப்பன். கருப்பன் திரைப்படத்தின் கதை என்பது அடித்து புழிந்து துவைத்து காய போட்ட தமிழ்சினிமாவின் வழமையான நம்பிக்கை துரோகத்து கதைதான் என்பதில் மாற்றம் இல்லை.. ஆனால் பிரசன்ட் பண்ண விதத்தில் ஜெயித்து இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி சான்சே இல்லை.. பின்னு இருக்கின்றார் மனுஷன்… அந்த பார் சீன் ராவடியில் இருந்து உன்னை ஏன் எனக்கு பிடிச்சது தெரியுமா? என்று விஜய் சேதுபதி…

Read More

Iraivi – Official Teaser | இறைவி திரைப்படத்தின் டீசர் வெளியீடு.

  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  விரைவில் வெளிவவர இருக்கும் திரைப்படம் இறைவி .. வழக்கம் போல அவருடைய  ஆஸ்த்தான நாயகர்கள் விஜய் சேதுபதி, பாபி  சிம்ஹா நடிக்கின்றார்கள். ஆனால் இறைவி படத்தில் புதுவரவாக  எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பதுதான் பெரிய  எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது… கார்த்திக் இயக்கிய இரண்டு படங்களுமே வெற்றி படம்.. ஜிகர்தண்டா வசூலில்  பின்னடைவு இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தி இருப்பார்… அதனாலே இறைவி படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறிகிடக்கின்றது என்றால் அது மிகையில்லை.. இந்த படத்தில் சில பெண்களின் கதையை பதிவு செய்வதாக  தற்போது வெளியிடப்பட்டு இருக்கும்  டிரைலர் சொல்கிறது… காத்திருப்போம்… என்ன சொல்லி இருக்கின்றார் என்று…?? பத்து படம் இயக்கிய இயக்குனருக்கு இருக்கும் ஒரு ரசிகர் கூட்டம்… இரண்டே இரண்டு திரைப்படம் இயக்கிய கார்திக்சுப்புராஜ்க்கு இருப்பது அவரது திறமைக்கு சான்று என்பேன்..…

Read More

vijay sethupathi gear up new title dharmadurai

ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் Rk சுரேஷ் தயாரிப்பில்  விஜய் சேதுபதி கதாநாயகனாக  நடிக்க சீனு ராமசாமி இயக்கும்  திரைப்படம் “தர்மதுரை” சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் Rk சுரேஷ் தயாரிக்கும் படம் ”தர்மதுரை” இப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக  நடிக்கிறார். இடம் பொருள் ஏவல் படத்திற்க்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இப்படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவு- சுகுமார், இசை- யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்- காசி விஸ்வநாதன், கலை- பத்மாமகன். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Read More

Naanum Rowdy Dhaan Movie Review by Jackie Sekar

      நானும் ரவுடிதான்..   விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… அதற்கு பின் சட்டென நானும் ரவுடிதான் என்று பெயர் வைத்து அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அவரோடு அவரின் விருப்பநாயகி நயன்தாரா நடிக்கின்றார் என்று சொன்னதும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி கிடக்க… அதை விட அனிருத்தின் இரண்டு பாடல்கள் எப்எம் ரேடியோக்களில் அலறி துடிக்க.. இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறவைத்தது என்றே சொல்ல வேண்டும்… தேவி பேரடைஸ் அரங்கம் ஸ்பெஷல் ஷோவுக்கு கூட்டத்தில் விழி பிதுங்கி நின்றது என்றே சொல்ல வேண்டும்.. == நானும் ரவுடிதான்…

Read More

Mellisai Official First Look Teaser | Vijay Sethupathi | Gayathrie | Ranjit Jeyakodi

விஜய் சேதுபதியில் மிரட்டல் அவதாரம் மெல்லிசை…. புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் , ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  விஜய்  சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தின் டீசர் இன்று மாலை சொன்ன நேரத்தில் வெளியிட்டு விட்டார்கள் . சமீபத்தில் வெளி வந்த இப்படத்தின் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி  கூறும் போது ‘இன்றைக்கு வெளி வர உள்ள ‘ மெல்லிசை’ டீசர்  எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் தொழில் நுட்பத்திலும் , ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்கும். முதல் போஸ்டருக்கும், முதல் டீசருக்கும் கிடைக்கும் வரவேற்ப்பு ஒரு இயக்குனருக்கு கிடைக்கும் பெரிய கௌரவம். அது எனக்கு இந்த டீசர் மூலம் கிடைக்கும் என்பதே மிக்க மகிழ்ச்சி என்கின்றார் ரஞ்சித் ஜெயக்கொடி…

Read More

Orange Mittai-2015 Movie Review – ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.

விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்.. டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்… ===== ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை என்ன?, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும்…. வயதான அதரவற்ற நெஞ்சுவலி பேஷன்ட் கைலாசம் என்கின்ற விஜய்சேதுபதிக்கும்…

Read More

PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்

எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்.. சிலருக்கு அழுது அழுது கண்கள் வீங்கி இருக்கும் அது போல புறம் போக்கு படம் பார்த்து விட்டு வெளியே வரும் ஆண்கள் பெண்கள் ரசிகர்களின் கண்கள் வீங்கி இருக்கின்றன…. காரணம் படத்தின் கடைசி அரைமணி நேரம்… அதுவும் விஜய் சேது பதி படத்தின் முக்கால் வாசி பகுதியில் கிளிஷே காட்சிகள் போல நடித்துக்கொண்டு இருந்தவர்.. கடைசி அரைமணி நேரம் பின்னி…

Read More