‘Baahubali’ Movie Thanks Meet | பாகுபலி சக்சஸ் மீட்

பாகுபலி இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்துக்கொண்டு இருப்பது பெரிய விஷயமே இல்லை.. ஆனால் தமிழ் நாட்டில் பாகுபலி ரிலிஸ் அன்று ஒரு பெரிய மாஸ் நடிகருக்கு கிடைக்க வேண்டிய ஓப்பனிங்கை பாகுபலி படத்துக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்தது சினிமாக்காரர்களையே ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்தது என்றால் அது மிகையில்லை… இப்போதைக்கு பாகுபலியும் பாபநாசமும் பேமிலி ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன…பாகுபலி தமிழில் வெற்றி பெற்றதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.,… விழாவில் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்…. இயக்குனர் ராஜமவுலி வரவில்லை.. காரணம் மூன்று வருட காலம் இந்த படத்தோடு பட்ட அவஸ்த்தைக்கு ரிலாக்சாக…குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டதாக கேள்வி.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா… பாகுபலி திரைப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரபாஸ்…

Read More

Baagupali Movie (2015) review | பாகுபலி திரைவிமர்சனம்

இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்… அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாகவா எடுக்க முடியுமா??? அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்… ‘ ராஜமவுலிக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று கணிக்க முடிகின்றது.. காரணம் சில வருடகாலம் எடிட்டிங் டேபிளில் வயிற்று பிழைப்புக்கு தவம் இருந்து இருக்கின்றார்…. அதனால் எந்த…

Read More

Bahubali Trailer Launch|ss rajamouli speaks making Bahubali|பாகுபலி டிரைலர் வெளியீடு

பாகுபலி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் ஹயத் ஓட்டலில் நடைபெற்றது… விழாவில் இயக்குனர் எஸ் ராஜமௌலி பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சூர்யா, நாசர், சத்தியராஜ், மதன்கார்கி போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். ஒரு இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் எஸ் எஸ் ராஜமௌலி. பாகுபலி படத்தை பார்த்து விட்டு ஷங்கரை விட எஸ் ராஜமௌலி சிறந்தவர் என்று மீடியாக்கள் பேச.. அதற்கு எஸ் ராஜமௌலி ஷங்கர் சார்… சிஜி விஷுவல் எபெக்ட் போன்றவற்றை அவருடைய திரைப்படங்களில் கையாண்டு வெற்றியடைந்த போது தனக்கு எதுவுமே அதை பற்றி தெரியாது என்று உண்மையை ஒத்துக்கொண்டதோடு ஷங்கருக்கு பின் என் பெயர் வருவதுதான் பொருத்தம் என்று பெரும்தன்மையோடு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி இருக்கின்றார். இந்திய சினிமா வரலாற்றிலேயே பிரி புரொடெக்ஷனுக்கு ஒரு வருடம் எடுத்துக்கொண்ட திரைப்படம் பாகுபலிதான்…. பாகுபலி தெலுங்கு…

Read More

Bahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.

சினிமாவே சுவாசம் என்று வாழும் கமலஹாசனே சிஜியில் சறுக்கி இருக்கின்றார்… புதிய தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு முந்திரிக்கொட்டை போல அறிமுகப்படுத்தும் கமலே அவர் நடித்த தசவதாரம் திரைப்படத்தில் சிஜியில் சறுக்கினார்… விஸ்வரூபத்தில் அதை சரிப்படுத்திக்கொண்டாலும்…வரலாறு தசவதாரம் சிஜியை மறக்காது… இன்னமும் மகதீராவோ… விரைவில் வெளியாக போகும் பாகுபலியோ… சிஜியில் அடித்துக்கொள்ளவே முடியாது என்பதே எதார்த்தம்… வாழ்த்துகள் பாகுபலி டீம்… உலக தரத்தில் சிஜி ஒர்க் அசத்தல்… சான்சே இல்லை Bahubali Trailer review #BaahubaliTrailer #Prabhas #AnushkaShetty @ssrajamouli @RanaDaggubati @tamannaahspeaks

Read More