#Naachiyaar Movie Review By Jackiesekar #நாச்சியார் திரைவிமர்சனம் #tamilcinemareview

பாலா படம் என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கும் இந்த படத்தில் அப்படி இல்லை.. தாரளமாக இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.. காரணம் முடிவு செம ஜாலியாக சந்தோஷமாக முடித்து இருக்கின்றார்… அதுக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம். நாச்சியாராக ஜோதிகா பின்னி இருக்கின்றார்.. அந்த வேகம்..ரசிக்கும் படி இருக்கின்றது.. ஒரு சில காட்சிகள் சினிமாதனமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் நெற்றியில் பூசை போட்டுக்கொண்டு குழந்தையை குளிப்பாட்டும் காட்சியிலும் சரி கிளைமாக்சிலும் சரி.. சான்சே இல்ல.. நீ ரொம்ப பெரிய மனுஷன்டா என்று கண்களில் லைட்டாக கலங்கியபடி சொல்லும்காட்சியில் மிளிர்கின்றார்… ஜிவி பிரகாஷ்… இதுதான் அவருக்கு முதல் படம்… சான்சே இல்லை.. ஷேர் ஆட்டோவில் பழகிய பெண்ணோடு… அவர் பின் தொடரும் காட்சிகளில் அசத்துகின்றார். இவனா.. அந்த வெகுளித்தனத்தோடு காத்திடம் குப்புற கவிழும் காட்சியில் அசத்துகின்றார்.. சிறுவயது காதலையும் காமத்தையும்…

Read More

I’m a Killer 2016 world Movie poland review by jackiesekar

இன்னைக்கு எல்லாம் ஒரு கொலை நடக்கின்றது என்றால்..  செத்தவனின் அல்லது சந்தேகப்படுபவனின்  போனை  வாங்கி கடைசி ஒரு மாத இன்கமிங்  அவுட் கோயிங்  கால்களை செக் செய்தாலே குற்றவாளி மிக எளிதாக மாட்டிக்கொள்வான்.. ஆனால் 1970களில் அப்படி அல்ல… கொலை நடந்தால் உண்மையான  குற்றவாளியை  கண்டு பிடிக்க தலையால் தண்ணி குடிக்க  வேண்டும். அதுவும் ஸ்மார்ட்டான கொலைக்காரன் என்றால் தாவு தீர்ந்து விடும். ஒரு கொலை நடந்து  உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்து தடயங்கள் சேகரித்து  கோர்ட்டில் படி   ஏறி அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதற்குள் ஏழு மலை ஏழு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் கிளியின் உயிரைக்கூட எடுத்து வந்து விடலாம். அந்த அளவுக்கு தாவு  தீர்ந்து விடும் மேட்டராக இருந்தகாலகட்டம்  அது. போலந்து நாட்டில் நடந்த  உண்மை சம்பவங்களின்…

Read More

Director Samuthirakani Why an conservative scene in the Movie Appa |இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு கேள்வி…

  இயக்குனர் சமுத்துரகனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அப்பா திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம்.. மக்களுக்கு நல் போதனைகளை போதிக்கும் திரைப்படம் என்று பரவலான பேச்சு ரசிகர்களிடத்தில் இருந்து வருகின்றது… மகிழ்ச்சி..   உண்மையில் நிறைய பிரச்சனைகளை மிக அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் …. அப்பா படத்தில் ஒரு காட்சி எல்லாவற்றிர்க்கும் திருஷ்ட்டி போல அமைந்து விட்டது… அந்த காட்சி என்னவென்றால்..   சமுத்திரகனி (தயாளன்) மனைவி பிரசத்திற்கு மருத்துவமனையில் சேர்க்க சொல்ல.. வலியில் துடித்துக்கொண்டு இருக்க…. மருத்துவமனையில் சேர்த்தால் வயிற்றை வகுந்து விடுவார்கள் … அதனால் மருத்துமனையில் சேர்க்கமாட்டேன் என்று ஒற்றைகாலில் நிற்பார். வீட்டில் பிரசவம் பார்ப்பதுதான் சரி என்று அமைதி காப்பார்… உறவுகள் எச்சரிக்கும்… இதோ பாரு..? என் தங்கச்சிக்கு ஏதாவது…

Read More

APPA ( 2016 ) tamil movie review by jackiesekar

அப்பா திரை விமர்சனம்… உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல… உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல… அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ வந்தவர்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல கலீல் ஜிப்ரான். எழுதிய இந்த வரியை முன் வைத்துதான் அப்பா திரைப்படத்தை சமுத்திரகனி எடுத்து இருக்கின்றார் ===== அப்பா திரைப்டபத்தின் கதை என்ன? மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி புரிந்துகொள்கின்றார்கள் என்பதையும் அவர்களின் பிள்ளைகள் வாழ்வில் எப்படியான தாக்க்ததை அவர்களுடைய அப்பாக்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்பதை பிரச்சார நெடியோடும் வாழ்வியல் எதார்த்தங்களையும் 35 எம் எம் திரைப்பட பார்மெட்டில் பதிவு செய்துள்ளார். ===. .படத்தின் சுவாரஸ்யங்கள். சமுத்திரகனி அப்பா நடித்ததோடு எழுதி இயக்கி இருக்கின்றார். ஒரு நல்ல அப்பா எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணத்துக்கு வாழ்ந்துள்ளார். வயதுக்கு வந்த பிள்ளையிடம் இது உன்…

Read More

Amma Kanakku movie review by jackiesekar

அம்மா கணக்கு திரைவிமர்சனம். திருமணத்துக்கு பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும் அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று  செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்… அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது. தனுஷ்க்கு எப்படி படம் பண்ண வேண்டும்? எப்படி  முதலீடு செய்து வெற்றி பெற வேண்டும்? எப்படி வோண்டர்பார் நிறுவனத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்? எப்படி குறைவான பட்ஜெட்டில் படம் எடுத்து நல்ல பெயரை எப்படி  எடுக்க வேண்டும் என்ற வித்தை அவருக்கு கை வருகின்றது… இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை. ====== அம்மா கணக்கு திரைப்படத்தின் கதை என்ன? கணவனை இழந்த அமலா பால்  வீட்டு வேலை செய்து தன் மகளை படிக்க வைக்கின்றார்… மகளுக்கு படிப்பின் மேல்…

Read More

Best Movie review app CineBee

  ஒரு திரைப்படம் பார்க்கின்றீர்கள்…   அந்த திரைப்படம் எப்படி இருக்கின்றது ? என்று உங்கள்  பார்வையில்  அல்லது அந்த படத்தில் நடித்த நடிகைர் நடிகையர்  பற்றிய உங்கள் கருத்துகளை , உங்கள் அபிப்ராயங்களை  பகிர ஆசை… ஆனால் சமுகவலைதளங்களில் பகிராலாம்..இல்லையென்று சொல்லவில்லை…கொஞ்சம் நேரம் எடுக்கும்…  நிறைய டைப் செய்ய வேண்டும்… ஆனால்  10 வினாடிகளில் ஒரு திரைப்படத்தினை பற்றிய  உங்கள் பார்வையை வெகு விரைவாக சினிபீ ஆப்பில் பதிவு செய்யலாம்.. ஆம் சினிபீ அப் திரைப்பட விமர்சனங்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ளது… முதற்கட்டமாக தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.. சினி பீ ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்… படம் பார்த்த உடன்  அந்த படத்தை பற்றிய அபிப்ராயத்தை நீங்கள் நேர்மையாக  பதிவு செய்யுங்கள்.. இந்த சினிபீ ஆப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால்..?? யாரும் யாரையும்…

Read More

Bale Bale Magadivoy (2015) telugu movie review

  பலே பலே மகாதீவோய்… நான் ஈ  நானி காட்டில் மழைபெய்துக்கொண்டு இருக்கிறது… பின்னே அவரின் எவ்டே சுப்ரமணியும் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்  என்றால்  பலே பலே மகாதேவோய் திரைப்படம் கலெக்ஷனில் பின்னி பெடல்எடுக்கிறது… சைக்கலாஜிக்கல் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்த திரைப்படத்தை மாருதி தசரி  இயக்கி இருக்கின்றார்.. = பலே பலே மகாதேவோய் திரைப்படத்தின் கதை  என்ன? நானிக்கு  எளிதில் மறந்து விடும் வியாதி.. அதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டு இருக்கும் போதே அடுத்து யாராவது பேச்சுக்கொடுத்தால்   செய்த வேலையை சுத்தமாக மறந்து விட்டு  பேச்சுக்கொடுத்தவரோடு சினிமாவுக்கு கிளம்பி செல்லும் ரகம்.. படத்தின் இடைவேளையின் போது செய்துக்கொண்டு இருந்த வேலை நியாபகத்துக்கு வந்தால்…. பாதி படத்திலேயே பிடறியில் கால் பதிக்க எழுந்து  ஓடிவரும் ரகம்.. இவருக்கு காதல்… நியாபக மறதியால்  நிறைய பிரச்சனைகள்…

Read More

spy game (2001) movie review | Robert Redford | Brad Pitt | Tony Scott

வேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும்  கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில்  உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி  நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு  அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…

Read More

paayum puli (2015)movie review

பாயும் புலி திரைப்படத்தின் விமர்சனத்துக்கு செல்லும் முன்… உங்களால் ஒரு படம் குறித்த தேதியில் ,குறித்த நேரத்தில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்றால் விளம்பர படுத்துங்கள்… அதற்கு பிறகு டிக்கெட்  புக்கிங் ஓப்பன்   செய்யுங்கள்… அம்மா கால் வலிக்கு மருத்துவமனையில் காட்ட  காலை ஷிப்ட்டை   மதியத்துக்கு  மாற்றிக்கொண்டு படத்துக்கு வந்தவனோ.. அல்லது  இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு விட்டு படத்துக்கு வந்து விட்டு  செல்லாம் என்று காலையில் திரைப்படத்துக்கு வந்தவனை கால் கடுக்க  நிற்க வைத்து  அவனை அவமானப்படுத்தி அனுப்பினால் முதல் முதல் காட்சிக்கு எப்படி நம்பி வருவான்..?? தியேட்டருக்கு போய் பாருங்கன்னு காத்து கத்து கத்திட்டு படம் பார்க்கவருபவனை அலைய உட்டா…??? அதெல்லாம் விடுங்க.. அடுத்தவங்க நேரம் என்பது உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா??, அவ்வளவு இளக்காரமா?? பாயும் புலின்னு இல்லை… உத்தமவில்லன், வாலு,…

Read More

CHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.

  நேற்று காலை 10,30 மணிக்கு   உங்கள் எட்டு வயதான  மகன்  ஜோரா அன்ட்ரூவின்   உடல்  வயால்கி நகரின்  கிழக்கே ஒரு கிலோ  மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது  அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று  உயிருக்கு உயிரான  நண்பன்  தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின்  உடலில்  உடை இருந்தது என்ற தன் நண்பனே  அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும்  போது…..  மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?? மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது…  மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின்   உடல்நிர்வாணமாக  கண்டெடுக்கப்பட்டது..  என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…

Read More