Uttama Villian Bagged Awards in Los Angles International Film Festival

    இயக்குனர் லிங்சாமி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து,  சமீபத்தில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன்….இந்த திரைப்படத்தை  நடிகரும் இயக்குனருமான  ரமேஷ் அரவிந் இயக்கினார்…. கமலஹாசன்,ரமேஷ் அரவிந், இருவரின் குருநாதர்  இயக்குனர் பாலச்சந்தர் இந்த திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அது அவரின் கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடதக்கது… உத்தமவில்லன் திரைப்படத்தில்  கமல்ஹாசன், பூஜா குமார், பார்வதி, நாசர், ஊர்வசி என்கே விஸ்வநாத் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்… சமீபத்தில் அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்  உத்தமவில்லன் திரைப்படம் திரையிடப்பட்டது…. இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த பின்னணி இசை (ஜிப்ரான்), சிறந்த பாடல் (ஜிப்ரான்), சிறந்த சவுண்ட் டிசைன் (குணால் ராஜன்) என 5 விருதுகள் அள்ளியது… அது மட்டுமல்ல…

Read More

Thoongaavanam – Behind The Scenes

  இயக்குனரும் நடிகருமான கமலஹாசன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரையில் முத்தமிட்ட தூங்காவனம் திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள்  மற்றும்  பின்னனி சுவாரஸ்யங்கள்… உங்களுக்காக.. Presenting you the behind the scenes of Thoongaavanam Cast: Kamal Haasan, Trisha Krishnan, Prakash Raaj, Kishore, Sampath Raj, Yugi Sethu, Madhu Shalini, Asha Sharath, Aman Abdullah      

Read More

Thoongavanam – Cheekati Raajyam Trailer Launch

  தூங்கா வனம் திரைப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.. விழாவில் கலந்துக்கொண்ட அத்தனை தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும்  நடிகர் நடிகைகளை  மேடையேற்றினார் கமல்.. 2011 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான ஸ்லீப்லெஸ் திரைப்படத்தின் ரிமேக் என்றாலும் இந்த படத்தை தனது உதவியாளர் ராஜேஷ் எம் செல்வத்தை இயக்கவைத்துள்ளார்… ஆனால் விழாவில் கலந்துக்கொண்ட ஒருவரும் அதை பற்றி வாயே திறக்கவில்லை… பாபநாசம் கொடுத்த வெற்றி கண்டிப்பாக கமலை யோசிக்க வைத்து இருக்க வேண்டும்…மூன்று வருடத்துக்கு  ஒரு படம் செய்து ரிசல்ட் என்ன என்று திகிலோடு  நகம் கடிப்பதற்கு பதில்.. மூன்று மாதத்துக்கு ஒரு படத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ளலாம்… அது மட்டுமல்ல கமல் பதினாறு வயது பாலகன் அல்ல என்பதை அவரும் புரிந்து வைத்துள்ளார்.. கவுதமி இந்த படத்தின்  காஸ்ட்யூம் டிசைனர்…  லைட்…

Read More

Maiem Tamil Movie Audio Launch

    சினிமா சாத்தியப்பட வேண்டி  கோடம்பாக்க தெருக்களில் அனுதினமும் பலர்  தலையால் தண்ணி குடித்துக்கொண்டு இருக்கும் வேளையில்… சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில்  மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்  அதித்தயா பாஸ்கரன் இயக்கி இருக்கும்  திரைப்படம் மய்யம்… இந்த திரைப்படத்தை ஸ்ரீதர் அவர்கள் தயாரித்துள்ளார். சினிமா ஷுட்டிங்கை  நேரில் பார்த்திராத… 12 பேர் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்து இருக்கின்றார்கள் என்பதோடு…  மணிரத்னமோடு  பணியாற்றிய ஜாம்பவான்களும் ஈகோ இல்லாமல் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்ல   வேண்டும்… ரொம்பவும் லோ பட்ஜெட் திரைப்படம்… இந்த படத்துக்கு  முருகானந்தம் வசனம் எழுதி இருக்கிறார்.. முக்கிய பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின்  பாடல்களை கமலஹாசன் கவுதமி  அவர்கள் ஆழ்வார்  பேட்டை இல்லத்தில் வெளியிட…மாணவர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தை கமல் வாழ்த்தி பேசினார்..…

Read More

Papanasam (2015)movie review |அசத்தும் தகப்பன் கமல்.

தினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி கேட்டான் என்பதற்காகா தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து கேமரா அனைக்கு பெண்கள் ஒருவகை…. அவர்கள் குளிப்பதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து இன்டர்நெட்டுகளில் வெளிவருவது ஒருவகை… அப்படியான வீடியோ ஸ்கேன்டலையும்…அதனால் பாதிக்கபடும் குடும்பமும்…. அந்த வீடியோவால் நடைபெறும் ஒரு அசாதாரண செயல் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை எப்படி அலைகழிக்கின்றது என்பதே திரிஷ்யம் படத்தின் கதை.. அதே தமிழில் பாபநாசம் பேமிலி திரில்லர்…. தரணியெங்கும் ரசிக்கபடும் ஒரு கதை…. அதற்கு அற்புதமான திரைக்கதை மூலம் பூசினார் இயக்குர் ஜீத்து ஜோசப்… படம் மலையாளத்தில் கண்ணா பின்னா என வெற்றி பெற்றது… மோகன்லாலின் நடிப்பு மிக முக்கியகாரணம் என்றால் அது மிகையில்லை.. அதன்பின்… தெலுங்கில்…

Read More

Avam Tamil movie|Kamal gives voice to Avam movie song Kaarirulae

இயக்குனர் விஜய் வில்வா கிரிஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் அவம் திரைப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடியுள்ளார்… பொதுவாக தான் நடிக்கும் படத்தை தவிற மற்றப்படங்களில் பாடுவதை அதிகம் விரும்ப மாட்டார்…. ஆனால் விரைவில் வெளிவர இருக்கும் அவம் திரைப்படத்தில் காரிருளே பாடலை பாடி இருக்கின்றார்… இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைக்க மதன் கார்க்கி எழுதிய பாடலை கமல் உணர்ச்சி வசப்பட்டு பாடியுள்ளார்… அது உங்களுக்காக.

Read More

Uttama Villain – Official Trailer #2 | Kamal Haasan

சில படங்களின் கதையை எளிதில் யூகித்து விடலாம்.. ஆனால் கமலின் உத்தமிவில்லன் திரைப்படத்தின் கதையை யூகிப்பது கடினம் தான் …   உத்தமவில்லனின் இரண்டாவது டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.. அதனை அவரது குருநாதர் பாலச்சந்தருக்கு சமர்பித்துள்ளார்.            

Read More