Smurfs: The Lost Village – 2017 review by jackie sekar

உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? குழந்தை இருக்கின்றதா? பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டார்களா? உங்கள் குழந்தைக்கு கார்ட்டூன் கேரக்டர்கள் என்றால் கொள்ளை பிரியாமா? கார்ட்டூன் சேனல்கள் பார்த்து ஆங்கிலம் கொஞ்சம் பரிட்சயமா? அப்படி என்றால் உங்கள் குழந்தைகளை இந்த விடுமுறை தினத்துக்கு Smurfs திரைப்படத்துக்கு அழைத்து செல்லுங்கள்… ஒரு அற்புதமான அட்வென்சர் காமெடி அனிமேஷன் திரைப்படத்தை கண்டு களித்த நிறைவு இருக்கும் … முக்கியமாக கலர்ஸ்.. சமீபத்தில் நான் பார்த்த அனிமேஷன் திரைப்படத்தில் இந்த அளவுக்கு கலர்ஸ் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை.. அதற்காகவே இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.   சரி Smurfs என்றால் என்ன? மழை காளன்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் நீல நிற குள்ள மனிதர்களை Smurfs என்று அழைப்பார்கள். கலிவர் கதைதான் இன்ஸ்பயர் என்றாலும் அதனை கற்பனையில் வைத்துக்கொண்டு வேறுஒரு…

Read More

FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM-ஆங்கிலம் மற்றும் தமிழிலும்.

November 18th முதல்! 2D, 3D மற்றும் IMAX வடிவில்,   கற்பனை உலகில் சஞ்சரிக்கும் வித்தியாசமான, விசித்திரமான பிராணிகள் உலா வரும் திரைப்படங்களுக்கு தனியொரு மவுசு  உலகெங்கும் என்றுமே  உண்டு! அதுமாதிரியான ஒரு கற்பனை காவியம் தான், இந்த ஹாலிவுட் திரைப்படம்.   Harry Potter புத்தகங்கள் மற்றும் திரைப்பட கதாபாத்திரங்களின் சிருஷ்டிகார்த்தா, J. K. Rowling என்கிற பெண் எழுத்தாளர் என்பது  நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.! அவரது கற்பனை வளத்தில் உருவான படமிது. Rowling இன் முந்தய படைப்பான, Harry Potter and the Sorcerer’s Stone படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதாபாத்திரமான Newt Scamander தான், இப்படத்தின் பிரதான கதாபாதிரம். விலங்கியல் நிபுணரான அவர், விசித்திரமான, வினோதமான குணாதிசயங்கள் கொண்ட சில வகை பிராணிகளை தன் கைப்பெட்டிக்குள் ரகசியமாக வைத்துள்ளார்!…

Read More

Ice Age: Collision Course | Tamil Trailer

ஐஸ் ஏஜ் திரைப்படத்தின் சீக்குவலில் ஐந்தாம் பாகம்தான் தற்போது வெளியாகி இருக்கும்  ஐஸ்ஏஜ் கொலிஷன் கோர்ஸ்… இந்த பாகத்தில் உலகத்தின் முடிவு நாள் எப்படி இருக்கும் எரி கற்கள்  வேற்று கிரகம் என்று ரொம்ப ரொம்ப அட்வென்சராக பயணிக்கின்றது  இந்த ஐந்தாம் பாகம்…. மிக முக்கியமாக ஆங்கிலத்தோடு தமிழிலும் இந்த திரைப்படம் கலக்க போகின்றது…. தமிழல் வெளியாகி இருக்கும் டிரைலர்  உங்களுக்காக.  

Read More

Mission: Impossible – Rogue Nation -2015 movie review |மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்

மிஷின் இம்பாசிபிள் 5 மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை… பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை.. கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்.. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா??? அதனால் அந்த ஏற்பாடு..…

Read More

Mission Impossible -5

டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு இயக்குனரின் படைப்பு ஆக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் டாம் க்ரூஸ். அவ்வகையில், இரத்தத்தை உறைய வைக்கும் Action காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்க வைக்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகத்தை கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ளார். “ மிஷன் இம்பாசிபிளின் இப்பாகத்தை இயக்குவது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. கதாநாயகன் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் கதாபாத்திரத்திற்கு இணையாக…

Read More