Thanga Magan tamil Movie review by jackiesekar For jackiecinemas | dhanush | samantha

  வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம்  விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்   என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்… ====== தங்கமகன் திரைப்படத்தின்  ஒன்லைன்? தன் குடும்பத்துக்கு ஏற்ப்பட்ட அவப்பெயரை தனுஷ் எப்படி துடைக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் ==== தங்கமகன் திரைப்படத்தின் கதை என்ன? ரவிக்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரே மகன் தனுஷ்…   எமியை காதலிக்கின்றார்.. கைகூடவில்லை.. அப்பாவுடன் வேலைக்கு போகின்றார். சமந்தாவை திருமணம்  செய்து கொள்கிறார்… நல்லா குடும்பம் போய்கிட்டு இருக்கும் போது பிரச்சனை…

Read More

Maari (2015) Movie Review |மாரி திரைவிமர்சனம்

மாரி….. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி படத்தில் தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர் கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால் மாரி அந்த அளவுக்கு ராவான ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்… ==== மாரி படத்தின் கதை என்ன? சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில் காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை. = பாலாஜி மோகனின் முந்தைய இரண்டு படங்கள் மென்மையான காதல் படங்கள்… அப்படியான இயக்குனர்…

Read More

Maari Trailer Review | Dhanush, Kajal, Robo Shankar, Anirudh | மாரி டிரைலர் விமர்சனம்

ரோபோ சங்கர்… கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டு, காஜலை funny girl என்று சொல்ல… அப்படியே கண்ணாடியை பிடிங்கி தான் மாட்டிக்கொண்டு தனுஷ் கொன்னுடுவேன் என்று சைகை காட்டிக்கொண்டே …. நாக்கை மடித்து ஒதை படுவே என்று சொல்லும் அந்த காட்சி மாரி டிரைலரில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி…

Read More

Kaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா

ஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.… பீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்.. சினிமா என்பது சமுகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமாக்கள் நடுத்தர அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் அதிகம் பதிவு செய்து இருக்கின்றன.. ஆனால் விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படங்கள் மிக மிக குறைவு…. உதாரணத்துக்கு ஈரான் படங்களை பார்த்தால் அந்த தேசத்தின் வறுமை அவர்கள் வாழ்வியல் போன்றவற்றை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்… இந்தி படங்கள் கூட வருடத்தில் நான்கைந்து படங்களில் விளம்புநிலை மக்களில் வாழ்வியலை பதிவு செய்கின்றன… ஆனால்…

Read More

kakki sattai( 2015) movie review

மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்…மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்…. அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்… சந்தானம் போல லொள்ளு சபாவில் நடித்த ஜீவா கூட ரஜினி சாயலில் நடித்தாலும்…. அவருக்கும் திறமை இருந்தது… ஆனால் கடைசிவரை ரஜினி மாயையில் இருந்து அவர் வெளிவரவேயில்லை.. அப்படி வந்து இருந்தால் சிவாவை போலோ… அல்லது சந்தானத்தை போல அவரும் சாதித்து இருக்கலாம்… ஆனால் சிவகார்த்திகேயன்… ரஜினிமேனாரிசங்களை பின் பற்றினாலும் தேவையான இடத்தில் மட்டும் பயண்படுத்தியது சிவாவின் வெற்றியும் புத்திசாலிதனமும் என்றே சொல்ல வேண்டும். எல்லா கமர்ஷியல் நாயகர்களும் கையில் எடுக்கும் ஆயுதம் .. காக்கி சட்டை..ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி…..அடி பட்டு வெற்றி தோல்வி எல்லாம் பார்த்து…. வாய்ப்பில்லலாமல் இருந்து கடைசி கட்டமா போலலிஸ்…

Read More