Veera Pandiya Katta Bomman Official Trailer

புதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்” வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலு அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

Read More

Slow Video-2014 Korean Movie review I காட்சிப்பிழை காதல்

ஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்…??? கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா??? ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா??? அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…

Read More