அலைகழிக்கப்படும் சினிமா ரசிகர்கள்.

செங்கல்பட்டு ஏரியா இன்னும் இழுபறியில் இருப்பதால் தெறி படத்தின் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை… புதுப்படத்தை ரசிகர்களோடு கண்டு மகிழ சிறந்த இடம்… காசி அல்லது குரோம் பேட் வெற்றிதான்.. ஆனால் இரண்டு தியேட்டரிலுமே தெறி திரைப்படத்தை வெளியிட சிக்கல் இப்போது வரை நீடித்து வருகின்றது…. காசி தியேட்டரில் சனிக்கிழமையில் இருந்தே டிக்கெட்டுக்காக விஜய் ரசிகர்கள் தவமாய் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்படி காத்து இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்… எந்த நிமிடத்திலும் பிரச்சனை தீர்ந்து டிக்கெட் எடுத்து விடலாம் என்ற நப்பாசை எல்லோருடைய முகங்களிலும் தெரிகின்றது.. சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவதே அறிதான நிலையில் இப்படி ரசிகர்களை அலைகழித்தால் அது நிச்சயம் எதிர்கால தமிழ் சினிமாவுக்கு நல்லது அல்ல.. சென்னையில் சத்தியம் அபிராமி தியேட்டர்கள் டிக்கெட் விற்பனையை முடித்து விடடன… ஆனால் தெற்கு பக்கம் இன்று…

Read More

Sardaar Gabbar Singh Telugu Movie Review by Jackiesekar

    70 கோடி முதலீட்டில் 44 வயது பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சர்தார் கப்பர் சிங். 2012 ஆம்  ஆண்டு வெளியாக கப்பர் சிங் வசூலில் சாதனை  படைக்க சும்மா இருப்பார்களா…? நாயகன்  பவனே கதை  திரைக்கதை எழுதி நடிக்கவும் செய்து இருக்கின்றார். படத்தை ரவிந்திரா இயக்கி இருக்கின்றார். சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை ? மத்திய பிரேதேஷத்தில் இருக்கும் ரத்தன்பூரை பைரோன் சிங் என்ற கொடுமைக்காரன் ஆட்டி படைக்கிறான்.. இன்ஸ்பெக்டர் சர்தார் கப்பர்சிங் எப்படி  வழிக்கு கொண்டு வந்து ரத்தன் பூரை அமைதி படுத்துகின்றான் என்பதுதான் சர்தார் கப்பர் சிங் திரைப்படத்தின் கதை. பவன் கல்யாண்.. மனிதர் பின்னுகின்றார்.. அவரை பிடித்து விட்டால் போதும் படத்தை அனு அனுவாக ரசிக்கலாம்.. அந்த அளவுக்கு படம் முழுக்க  சேட்டையில் …

Read More

Jil Jung Juk movie press meet

பொதுவாக வருடத்துக்கு சராசரியாக வெளியாகும் 250 தமிழ் ததிரைப்படங்களின் அனைத்து பிரஸ் மீட்டுகளிலும் ஒரு ஒற்றுமையை காணாலாம்… வித்தியாசமான கதைக்களம்… நிறைய உழைப்பை கொடுத்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றோம்… இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்…இது போன்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது… யாரும் தொடாத சப்ஜெக்ட்… பின்னனி இசைக்கு பெல்ஜியம் சென்று இருக்கிறோம்… என்று கலர் கலராக உணர்ச்சி வசப்பட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்பட குழுவினர் பேசுவார்கள்… நாமும் ஆர்வத்தோடு படம் வெளிவரும் நாளில் முதல் ஷோ ஆர்வத்தோடு பார்க்கபோய் மொக்கை வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம்… ஆனால் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கம் போல வித்தியாசமான திரைப்படம் என்று சொன்னலும்… நிஜமாகவே வித்தியாசமான திரைப்படம்தானோ என்று எண்ணும் அளவுக்கு அதன்…

Read More

Irudhi Suttru movie review by jackie sekar

இறுதி சுற்று… திரை விமர்சனம். மணிரத்னம் பள்ளியில் இருந்து வெளி வந்து இருக்கும் அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று. தமிழ் பெண் இயக்குனர்கள் வரிசையில் மேலும் ஒரு எண்ணிக்கை சுதா வருகையினால் கூடி இருக்கின்றது. மாதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் காத்திருந்து செய்து இருக்கும் திரைப்படம் இந்தியின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹீராணியின் தூக்கத்தை கெடுத்து மாதவன் அவரிடம் சொன்ன கதை.. கதையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக இந்தி திரை வடிவத்தை வட இந்தியாவில் தன் பேனர் மூலம் ரிலிஸ் செய்கின்றார்.. . ==== இறுதி சுற்று திரைப்படத்தின் கதை என்ன,? மாதவன் இந்திய பாக்சிங் விளையாட்டில் சிறந்த கோச்… ஆனால் பாக்சிங் ஆணையத்தில் உள்ள உள் அரசியலில் அவர் சிக்கி சின்னபின்னமாகின்றார்..…

Read More