AIR FORCE ONE (1997) MOVIE LOVELY SCENE

  1997 ஆம் ஆண்டு வெளியான ஏர் போர்ஸ் ஒன் திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-?? அதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்… அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை… எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை மெய் மறந்து ரசிப்பேன்… நல்ல திரைக்கதைக்கும் நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்…. அக்காலத்தில் மிக பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் அது…. ஹாரிசன் போர்டு அமெரிக்க ஜனாதிபதியாக நடித்து இருப்பார். நிஜத்தில் கிளின்டன் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த நேரம்.. கயவர்களால் அமெரிக்க ஜனாதிபதி அவரின் பிரித்யோக விமானமான ஏர்போர்ஸ் ஒன் இல் இருந்தே கடத்திப்பட்டு விடுவார். பல போராட்டங்களுக்கு பிறகு பிரசிடென்ட் மீட்களாம் என்று இருக்கும் போது அவரை ஒரு இராணுவ விமானத்தில் சென்று காப்பாற்ற வீரர்கள்…

Read More

Srimanthudu – 2015 Movie Review |ஸ்ரீமந்துடு திரைவிமர்சனம்

ஸ்ரீமந்துடு. மகேஷ்பாபுவுக்கு கடந்த கால படங்கள் மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை.. கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும் அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார். வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இனி விரிவாய் பார்ப்போம். சரி ஸ்ரீமந்துடு என்றால் என்ன அர்த்தம்..?? பணக்காரர் என்று அர்த்தம். அதற்கு முன் ஸ்ரீமந்துடு திரைப்படத்தின் கதை என்ன என்று பார்த்து விடலாம்.. ======== பணக்கார ஜெகபதிபாபுவின் பையன் மகேஷ் பாபு.. அப்பாவின் தொழிலில் ஆர்வம் இல்லை…. கண்டதும் ஸ்ருதி மேல் காதல்… தான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதை ஸ்ருதியிடம் மறைக்கின்றார்… ஸ்ருதிக்கு உண்மை தெரியும் போது, தான் கிராமத்து பெண் என்றும் நீ பணக்காரன்..…

Read More

Mission: Impossible – Rogue Nation -2015 movie review |மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்

மிஷின் இம்பாசிபிள் 5 மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை… பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை.. கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்.. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா??? அதனால் அந்த ஏற்பாடு..…

Read More