spy game (2001) movie review | Robert Redford | Brad Pitt | Tony Scott

வேலை செய்யும் இடத்தில் ரிட்டெயர்மென்ட் ஆகப்போகும்  கடைசி தினம் எல்லோருக்கும் சுபிட்சமாக அமைந்து விடுவதில்லை… சிலருக்கு சுபிட்சமாக இருக்கும் ஆனால் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்…காரணம் நாளைக்கு வேறு ஒருவர் வந்து அந்த சீட்டில்  உட்காரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு செல்ல வேண்டும்.. ஆனால் எட்டு மணி  நேரம் முடிந்து விட்டால் உங்களுக்கும் அந்த இடத்தில்மிதிப்பில்லை… நீங்கள் உயர் பதிவியில் அதுவும்..உளவாளிகளுக்கு தலைவராக இருந்தவர்..உங்களுக்கு நெருக்கமான, மிகவும் திறைமையான உளவாளி, கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் உளவாளி அவன்… எதிரி நாட்டில் ஒரு பெண்ணை காப்பாற்ற போய் மாட்டிக்கொள்ளுகின்றான்…அது அவனது பர்சனல்.. அரசாங்கத்துக்கு  அவன் அந்த செயலில் ஈடுபட்டது தெரியாது…ஆனால் அவனை சிறை பிடித்த உடன் அரசு உயர் அதிகாரிகள் அவனை கைகழுவி வட நினைக்கின்றார்கள்..24 மணி நேரத்தில் அவனை…

Read More

Mission: Impossible – Rogue Nation -2015 movie review |மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்

மிஷின் இம்பாசிபிள் 5 மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் … பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை… பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை நாலு சீனுக்கு ஒரு சீனில் நீ நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விடும் டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை.. கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் இரண்டாம் பாகம் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்.. ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும் அல்லவா??? அதனால் அந்த ஏற்பாடு..…

Read More

kingsman The Secret Service -2015- Movie Review| உருவாகும் உளவாளி|உலக சினிமா|இங்கிலாந்து

சுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை..??? ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…

Read More

A HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா

எந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்..? காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…

Read More