கார்த்திக் டயல் செய்த எண் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்கள்

கசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு…

Read More

தளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் ! வைரலாகும் வீடியோ !

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது . குறிப்பாக தளபதி விஜய் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை வரவேற்பை பெற்றது . தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது .குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் டிக் டாக்கில் (பெயர் – EUGENIA ) வெளிநாட்டு பெண் ஒருவர் குட்டிஸ்டோரி பாடலை பாடி பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Read More

நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இலங்கை தமிழர்களுக்கு உதவி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட    அத்தியாவசிய மளிகை பொருட்கள்  வழங்கினர். இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜூனா கூறுகையில்…. மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை துவங்கிய நாள் முதல் இன்றுவரை    இயற்கை, மொழி, கலை போன்ற சமூக சிந்தனையுடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கஜா புயல், ஒக்கி புயல் போன்ற  இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுடன் மக்களாக தோள்கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின்  தாரமங்கலத்திலுள்ள   நமது தொப்புள் கொடி உறவுகளான  ஈழ தமிழ்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும்…

Read More

நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’!

முருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து,  ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். பிட்நெஸ் என்று சொல்லப்படும் உடற்தகுதி / ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களுள் அசோக்கும் ஒருவர். மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் உடற்பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும் என்பதற்காக பிரீக்கத்தான் Freak- a-thon எனும் பெயரில் இசை மற்றும் ஆடலுடன் கூடிய உடற்பயிற்சி முறையினை அறிமுகப்படுத்தி இந்தியா மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் இதனைப் பிரபலப்படுத்தியவர். நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கெதிரான ‘வியோல்’ என்கிற குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.…

Read More

“ராட்டினம்” – இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்

சில திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த போதும் அது தரும் உணர்வுகள் குறைவதே இல்லை. சில படங்கள் பார்க்கும் போது நமக்கு தோன்றுவது “எப்படி சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!”. அப்படியொரு திரைப்படம் தான் ராட்டினம். நம்மில் பலருக்கு இந்த படத்தை பற்றி தெரிந்து இருக்கும். முற்றிலும் புதுமுகங்களை கொண்டு ஒரு புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய படம் ராட்டினம். 2012 ல் வெளியான திரைப்படம். பதின்பருவ விடலை படங்கள் என்றாலே கவர்ச்சியும், கிளாமரும் தூக்கலாக இருக்கும். அது போல் குடும்பத்தோடு பார்க்க கஷ்டப்படுத்தும் எந்த காட்சியையும் வைக்காமல் தினந்தோறும் சமூகத்தில் நடப்பதை சினிமாவின் அழகியல் மொழியில் காட்டி முதல் படத்திலேயே தன் நேர்மையை பதிவு செய்கிறார் இந்த படத்தின் இயக்குனர் தங்கசாமி. படத்தின் முற்பாதியில் விடலைகளின்…

Read More