லவ் அட் பர்ஸ்ட் பைட்… நேற்று இரவு பார்த்த பிரெஞ்சு திரைப்படம் மனதை கவர்ந்தது.. இந்தனைக்கு அரதபழசான கதை… பெரிதாய் திருப்பங்கள் ஏதும் இல்லை.. அப்படி இருந்தும் அந்த படத்தை நான் ரொம்பவே ரசித்தேன்.. பொதுவாக உலக படங்கள்… சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே இருக்கும்.. அவர்கள் திரைப்படங்களில் திரைப்படத்தின் முடிவில் தீர்வை நோக்கி வலுக்கட்டாயமாக செல்லவேமாட்டார்கள்… அது ஒரு படைப்பாளியின் வேலை அல்ல…. சினிமா கலை தெரிந்தவர்களுக்கு இது புரியும்…தமிழில் அவ்விதமாக தீர்வை வலுக்கட்டாயமாக திணிக்காமல் அதன் போக்கில் விட்டு விடுபவர்களில் இயக்குனர் மணிரத்னம் மிக முக்கியமானவர் என்று சொல்லாம்.. ========= சரி லவ் அட் பர்ஸ்ட் பைட் படத்தின் கதை என்ன?, Madeleine பருவ பெண்… ராணுவத்தில் சேர வேண்டும் லட்சியமும் வேட்கையும் கொண்ட பெண்… Arnaud Labrède அவனுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும்…
Read MoreCategory: World Movies
World Movies
Trash (2014) movie review | must watch movie
டிராஷ்… 2014ஆம் ஆண்டு வெளியான பிரேசில் நாட்டு திரைப்படம்… பள்ளிக்கரனை சதுப்புநில பகுதியை கடந்து ஐடி செக்டாருக்கு வேலைக்கு செல்லும் அத்தனை பேரும் மூக்கை பொத்திய படி வேலைக்கு செல்வார்கள் … ஆனால் அந்த இடத்தில் வேலை செய்யும் லாரி ஓட்டுனரில் இருந்து சூப்பரவைசர் வரை எல்லோரும் மனிதர்களே… அதை விட அந்த பகுதியில் குப்பையில் இருந்து நல்ல பொருட்களை பிரித்து எடுத்து பழைய பேப்பர் ,இரும்பு வாங்கும் கடையில் குப்பையில் இருந்து எடுத்த பொருட்களை கொடுத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள்.. அப்படியா மனிதர்களை பற்றிய கதைதான் பிரேசில் நாட்டு திரைப்படமான டிராஷ்… டிராஷ் படத்தின் கதை என்ன?? பிரேசில் நாட்டில் குப்பையில் கிடைக்கும் நல்ல பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வரும் சிறுவர்கள் கையில் ஒரு பர்ஸ் கிடைக்கின்றது.. அந்த…
Read MoreWHO I AM I -2014 (GERMAN) MOVIE REVIEW | நான் யாரு ? எனக்கே தெரியலையே…
யாருக்கு என்ன தேவையோ..அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள்… இதுதான் ஒன்லைன்… இதை வைத்துக்கொண்டு மிக அற்புதமாக கதை பண்ணி இருக்கிறார்கள்… மிக அற்புதமான திரைக்கதையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த ஜெர்மன் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும்.. பென்ஜமின் என் பெயர். எல்லோரையும் விட என்னை பாராட்டும் படி நான் சாகச செயல் செய்ய வேண்டும்… உதாரணத்துக்கு நான் சூப்பர் ஹீரோ போல ஆக வேண்டும்… ஆனால் நான் தான் செய்தேன் என்று தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான்… ஆனால் நான் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவன் போலிசில் சரண் அடைந்தால் அதுவும் அவன் உலகிலேயே வலை வீசி தேடப்படும் ஒரு ஹேக்கர் என்றால் உட்கார வைத்து ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பார்களா? என்ன? ஆனால் அவன் ஆராத்தி எடுக்க வைக்கிறான்…
Read MoreCHILD 44 -2015 MOVIE REVIEW|WORLD MOVIE|44 சிறுவர்கள் கொலை.
நேற்று காலை 10,30 மணிக்கு உங்கள் எட்டு வயதான மகன் ஜோரா அன்ட்ரூவின் உடல் வயால்கி நகரின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை ஓரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது… அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அவன் உடலில் அவன் அணிந்து இருந்த உடை இருந்தது என்று உயிருக்கு உயிரான நண்பன் தன்னோடு வேலை பார்ப்பவன்..தன் இறந்து போன மகனின் உடலில் உடை இருந்தது என்ற தன் நண்பனே அண்டை புளுகு புளுகி பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது….. மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?? மகனின் தாய் குலுங்கி அழுகிறாள்.. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வாசிக்கும் போது… மகனின் தாய் குறிக்கிடுகின்றாள்… என் மகனின் உடல்நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.. என்று இடைமறிக்கின்றாள்… இல்லை உங்கள் மகன் உடல் கண்டெடுக்கப்பட்ட போது,…
Read MoreSlow Video-2014 Korean Movie review I காட்சிப்பிழை காதல்
ஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்… ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்…??? கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா??? ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா??? அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது… எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ்…
Read Morekingsman The Secret Service -2015- Movie Review| உருவாகும் உளவாளி|உலக சினிமா|இங்கிலாந்து
சுத்தி வளைச்சி எல்லாம் கதை சொல்ல வரலை… ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்துஇருக்கிங்க இல்லை..??? ஆமாம்.. அது போலான ஒரு உளவாளி திரைப்படம் தான் கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்விஸ் திரைப்படம். கிங்ஸ்மேன் என்பது ஒரு டைலர் கடை… சிரிக்காதிங்க.. மிஸ்டர்.,… வெளியிலேதான் டைலர் கடை அதன் உள்ளே இல்லாத ஆயுதங்களே இல்லை…. கிங்ஸ்மேன் சீக்ரேட் சர்விஸ் என்பது தனி நபர்கள் உளவாளி இல்லை… எந்த பிரச்சனையா இருந்தாலும் பாண்டு மட்டுமே மார்மேலயும் தோள் மேலேயும் போட்டுக்கிட்டு போய் பிரச்சனையை சந்திக்கறது போல இல்லாம… கிங்ஸ்மேன் என்பது ஒரு குழு… கிங்ஸ்மேன் குழுவில் இடம் பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை… அந்த டெஸ்ட் எல்லாம் ரொம்ப கடுமையா இருக்கும்… எசகு பிசகா கொஞ்சம் அசந்தா கூட… மார்கேயாதான்… மந்திரி பையன் நான்… அப்பாக்கிட்ட லட்டர் வாங்கிட்டு வரேன் என்று யாரும்…
Read More“The Connection” (aka “La French”)-2014 franch movie review|பிரான்ஸ் தேசத்து ஹெராயின் சாம்ராஜ்யம்.
பிரெஞ் கனெக்ஷன் சிறு குறிப்பு வரைக.. துருக்கியில் இருந்து ஹெராயின் போதைப்பொருள் பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு,,,, அப்படியே அங்க இருக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கனடா வழியாக அமெரிக்காவுக்கு ஹெராயின் எடுத்து செல்லப்படுவதே பிரேச்சு கனெக்ஷன் என்று அழைக்கப்படும்… அமெரிக்காகாரன் லபோ திபோன்னு காது கிழிய கத்தறான்.. பிரர்ன்ஸ் பொறம் போக்குகளா?? நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா??? அல்லை ஆசிப்பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்திக்கிட்டு கெடக்கா……
Read MoreKaakka Muttai (2015) movie review | காக்கா முட்டை திரைவிமர்சனம் |தமிழில் ஒரு உலக சினிமா
ஏற்ற தாழ்வுகள் கொண்ட நகரம் சென்னை.. அதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து… கடந்த பத்து வருடத்தில் வெவ்வேறு முகமூடிகளை சென்னை மாட்டிக்கொண்டுவிட்டது.… பீட்சா ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்று என் நான்கு வயது மகளுக்கு தெரிகின்றது. ஆனால்அதே பீட்சாவை சுவைத்த பார்க்காத குழந்தைகளுக்கும் இதே சென்னையில் வாழ்கின்றார்கள்.. சினிமா என்பது சமுகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமாக்கள் நடுத்தர அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் அதிகம் பதிவு செய்து இருக்கின்றன.. ஆனால் விளம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்த திரைப்படங்கள் மிக மிக குறைவு…. உதாரணத்துக்கு ஈரான் படங்களை பார்த்தால் அந்த தேசத்தின் வறுமை அவர்கள் வாழ்வியல் போன்றவற்றை எளிதாக புரிந்துக்கொள்ளலாம்… இந்தி படங்கள் கூட வருடத்தில் நான்கைந்து படங்களில் விளம்புநிலை மக்களில் வாழ்வியலை பதிவு செய்கின்றன… ஆனால்…
Read MoreA HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா
எந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்..? காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான். குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான். வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,.. காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான். பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும்…
Read MoreThe Salvation-2014-movie review -Denmark|உலக சினிமா|பழிக்குப்பழி.
The Salvation சொல்லி சொல்லி சலித்து, போன பழிக்கு பழி வாங்கும் கதைதான்…உலகில் ஒவ்வோருவரும் யாரோ ஒருவரால் பாதிப்பு அடைந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்… ஆனால் பாதிப்புக்கு என்று ஒரு அளவுகோல் என்று உண்டு அல்லவா? பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றேன் என்று வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்பதற்க எல்லாம் கத்தி எடுத்துக்கொண்டு போய் கழுத்தை அறுக்கபோவதில்லை… மிஞ்சி மிஞ்சி போனா நாதாரி நாயே நீ உருப்பட மாட்டே என்று சொல்லி விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விடுவோம்.. ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் குடும்பத்தினோருடு… ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருக்கும் சின்ன இடத்தில் வாழ்க்கையை ரம்யமாக எதிர்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இவ்வளவுநாள் பிரிந்து இருந்த மனைவி மகனை முதல் முறையாக ரயில் நிலையத்தில் சந்திக்கின்றான்.. குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு மனைவி மகனை அழைத்துக்கொண்டு செல்லும் போது…
Read More