நான்கு மொழிகளில் ‘உச்சகட்டம்’

திகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில் வல்லவரும், அதற்காகவே பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றவருமான இயக்குனர் சுனில் குமார் தேசாய், இப்போதும் ஒரு பன்மொழி திகில் திரைப்படத்துடன் உங்களை சந்திக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இத்திரைப்ப்படம் உலகெங்கிலும் திரையிடப்பட இருக்கிறது. தமிழில் “உச்சகட்டம்” என்றும், “உத்கர்ஷா” என மற்ற மூன்று மொழிகளிலும் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், வருகின்ற மார்ச் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஆர் தேவராஜ் ‘தி கிரியேஷன்ஸ்’ சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்க, ஏஜிஎஸ் சினிமாஸ் உலகெங்கும் இதனை வெளியிட இருக்கிறது. திகில் கதைகள் படைப்பதில் அப்பழுக்கற்ற திறமை கொண்ட சுனில் குமார் தேசாய், இம்முறையும் ஒரு மிகச் சிறந்த சுவராஸ்யமிக்க திரைபடத்தை திகில், மர்மம், எதிர்பாரா திருப்புமுனைகள், குறிப்பிடத்தக்க அதிரடி காட்சிகள் என படம் முழுவதும் தனது காட்சி அமைப்பில் முத்திரையை…

Read More