“ராட்டினம்” – இன்றும் கொண்டாடப்படும் திரைப்படம்

சில திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் பல கடந்த போதும் அது தரும் உணர்வுகள் குறைவதே இல்லை. சில படங்கள் பார்க்கும் போது நமக்கு தோன்றுவது “எப்படி சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்!”. அப்படியொரு திரைப்படம் தான் ராட்டினம். நம்மில் பலருக்கு இந்த படத்தை பற்றி தெரிந்து இருக்கும். முற்றிலும் புதுமுகங்களை கொண்டு ஒரு புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய படம் ராட்டினம். 2012 ல் வெளியான திரைப்படம். பதின்பருவ விடலை படங்கள் என்றாலே கவர்ச்சியும், கிளாமரும் தூக்கலாக இருக்கும். அது போல் குடும்பத்தோடு பார்க்க கஷ்டப்படுத்தும் எந்த காட்சியையும் வைக்காமல் தினந்தோறும் சமூகத்தில் நடப்பதை சினிமாவின் அழகியல் மொழியில் காட்டி முதல் படத்திலேயே தன் நேர்மையை பதிவு செய்கிறார் இந்த படத்தின் இயக்குனர் தங்கசாமி. படத்தின் முற்பாதியில் விடலைகளின்…

Read More

Noise and Grains about their New initiative “Noise and Grains-Movies “

இந்த கொரானா காலகட்டத்தில் தாங்களும் தங்களது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருப் பீர்கள் என்ற நம்பிக்கையில் noise and grains மீண்டும் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. மக்களிடத்தில் பிரசித்தமான எங்களது noise and grains நிறுவனத்தில் இருந்து இது வரை இசைமழையால் உங்களை நனைத்து வந்தோம். தமிழ் சிம்பொனி தந்த இசைஞானி இளையராஜா, ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் A R ரஹ்மான், 1000 பாடல்களுக்கு மேல் பாடிய SPB, காந்த குரலோன் ஜேசுதாஸ், ஹரிஹரன், பாடகர் ஸ்ரீனிவாஸ், சித் ஸ்ரீராம், சின்மயி, நடிகை ஆண்ட்ரியா உட்பட பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர், முத்தாய்ப்பாக இளைய தளபதி விஜயின் மாஸ்டர் ஆடியோ நிகழ்ச்சி போன்றவற்றை வழங்கிய noise and grains ன் அடுத்த…

Read More

“பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன். ஒவ்வொரு…

Read More

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் மேதாவி

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது. இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார். நகைச்சுவை பங்கிற்கு சாரா, ‘கைதி’ படம் தினா, ரோபோ…

Read More

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்கள், ஆயிரக்கணக்கான நலிந்த நாடகநடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள். சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர். அதன் தலைவர் தோழர் கொளத்தூர் வழிகாட்டுதலினபடி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள, ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள, 110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 09ம் தேதி, பொள்ளாச்சி அருகில் உள்ள கோட்டூர் ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில், பதிவு அட்டை உள்ளவர்களுக்கும், பதிவு அட்டை இல்லாதவர்களுக்குமாக மொத்தம் 300 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பதிவு அட்டை இல்லாதவர்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டது. அடுத்ததாக மே 12-ம் தேதி, ஆழியாறு…

Read More

ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’

விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார். ஒரு 8 வயது சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்த பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கை பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகளும்-இகழ்வுகளும், அவனை எப்படி புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதை பல்வேறு சுவராஸ்யங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும், ஜனரஞ்சகமான ஒரு புதிய பரிமாணத்தில் கதைகளத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், ரிதுபர்னா சென்குப்தா, அங்கன் மாலிக் முன்னணி வேடங்களில் நடிக்க, அவர்களோடு இணைந்து உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன்,…

Read More

அடையாளமற்ற மூன்றாம் பாலினத்தாருக்கு தமிழக அரசு ஆதரவு

இன்றைய பொது முடக்கத்தால் அன்றாட தேவைகளுக்கே மிகவும் போராடும் சமூகங்களில் ஒன்றாக, ரேஷன் கார்டுகளும் அடையாள அட்டைகளும் இல்லாத மூன்றாம் பாலினத்தாரை எளிதில் அடையாளம் காட்ட முடியும். கோவிட் நிவாரணம் மற்றும் ஆதரவு தொடர்பான சிறப்பு நோடல் அதிகாரி, டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. மேகநாத் ரெட்டி ஐ.ஏ.எஸ்., ஆயா இருவரும் சென்னையில் கடுமையான சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கும் திருநம்பிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர். இந்த முயற்சியின் முக்கிய பயனாளிகளாக ரேஷன் கார்டு அல்லது பாலின அடையாள அட்டைகள் இல்லாத திருநம்பிகளும் திருநங்கைகளும் ஆவர். அதிதி மதுசூதன், ‘பார்ன்2வின்’ அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்வேதா சுதாகர் ஆகியோர் அடையாள அட்டைகள் இல்லாத திருநம்பி-நங்கை சமூகத்தை சேர்ந்த சுமார் 350 பயனாளிகளை அடையாளம் கண்டு, உலர் ரேஷன் தொகுப்புகளை…

Read More