பற படம் சமூகத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும் – பா.ரஞ்சித்

ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது, இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார்.…

Read More

தேசிய விருது போட்டியில் தாதா87

தாதா 87 படத்திற்கு கிடைத்த பெருமை – குவியும் வாழ்த்துக்கள்! தாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது. இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்க, லியாண்டர் லீ மார்டின்…

Read More