கே.வி.விஜயேந்திர பிரசாத், ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்

Cinema News 360 News Tamil Cinema

பிரபல திரைக்கதை மேதை கே.வி.விஜயேந்திர பிரசாத், ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்

பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தெரிவித்தார்.

‘பாகுபலி 1 மற்றும் 2’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘மணிகர்னிகா’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான பிரமாண்ட வெற்றி படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார்.

ஸ்ரீவாரி பிலிம் ஏற்கனவே ‘தர்மபிரபு’ மற்றும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப சித்திரமாகும். இதில் சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விநியோகஸ்தராக திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கநாதன் தனது கடின உழைப்பின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆவார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல படங்களை அவர் விநியோகம் செய்து சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹீரோக்களுக்கு செலவு செய்வதற்கு பதில் கதைக்கு செலவு செய்யுங்கள் ” மெய்ப்பட செய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் கால்தடம் பதிக்கும் நடிகர் மஹத்

admin