மாநாடு பட ஆடியோ வெளியீட்டில் நிகழ்ந்த சுவாராஷ்யங்கள்

 

 

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வர இருந்த இந்த திரைப்படம் சில பிரச்சினைகளால் நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘நான் மாநாடு படத்தில் நடிக்க காரணம் ‘அப்துல்காலிக்’ என்கிற கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாவதற்குள் நான் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டேன். எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்.

பல பிரச்சினைகளைத் தாண்டியே மாநாடு திரைப்படம் வந்துள்ளது. நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ரசிகர்களாகிய உங்களுக்காகத்தான். இந்த பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் என்னை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கண்ணீருடன் பேசினார்.

மேலும் சில நிமிடம் பேச முடியாமல் மேடையிலேயே நின்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

நாயகன் சிம்பு பேசும்போது, “என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு.. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு,.. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம்.

இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம். யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு..

இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க.. ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார்.. இந்தப்படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லகிட்டே இருந்தேன்..இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு..

என்றவர் திடீரென கண் கலங்கினார்..

“என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசிய சிம்பு, அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை நிறைவு செய்தார்