பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ” தோப்புக்கரணம் ”

இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ” கைலா ” படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

” தோப்புக்கரணம் ” படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த “ஸ்டீவ் ” நடித்திருக்கிறார்.

இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.

தயாரிப்பு மற்றும் இயக்கம் பாஸ்கர் சீனுவாசன்.

100 நாட்களில் 100 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த ஷரவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்..பாடல்களை நிகரன் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் ஒரே ஏரியாவில் வசிக்கும் 5 நண்பர்களை அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

5 கல்லூரி மாணவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 500 கல்லூரி மாணவர்களை வரச்செய்து அதில் 5 மாணவர்களை தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ளோம்.

திருச்சி, மதுரை, கோவை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்து காமெடி மற்றும் இதர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். முற்றிலும் பொழுது போக்கு படமாக வரவிருக்கும் தோப்புக்கரணம் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடை பெற்றது. ஸ்பெஷல் பர்மிஷனில் இது வரை படப்பிடிப்பு நடைபெறாத வீடூர் டேமில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.