ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

Covid-19 கிருமி இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் உலகில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஒரு அழகிப்போட்டி நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின் பற்றி வரும் இந்நிலையில் இது எப்படி சாத்தியம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் Madras institute of hotel management வழங்கிய ‘Quarantine Queen’ என்னும் அழகிப் போட்டியை FFace Creators நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் இந்தப் போட்டி முற்றிலும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த அழகிப் போட்டியில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே கலந்து கொண்டனர்.

Quarantine Queen முற்றிலும் பெண்களுக்கானது. இந்தப்போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹரியானா, மும்பை என பல்வேறு இடங்களிலிருந்து பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி ஏப்ரல் மாதம் 22 துவக்கப்பட்டது. இந்த அழகிப்போட்டி பல்வேறு சுற்றுகளை உள்ளடக்கியது.

“தன்னைத்தானே அறிமுகப்படுத்துதல்”(Self introduction)
“கலாச்சார உடை சுற்று” (Traditional)
“பெண்ணுக்குள் ஆண் சுற்று”(Women in Men)
” உடல் பயிற்சி சுற்று”(Workout Shape up)
” நவரசம் சுற்று”(Navarasam)
” திறமை வெளிப்படுத்துதல் சுற்று”(Talent)
” இருதி சுற்று”

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மே மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூரை சேர்ந்த காவியா சௌந்தர்ராஜன் Quarantine Queen பட்டத்தை தட்டிச் சென்றார். அஸ்வினி இரண்டாம் இடத்திலும், கீர்த்தனா கிருஷ்ணன் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டிக்கு திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

F Face Creators இன்னும் இதுபோன்று போட்டிகளை நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.