கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடன போட்டி”

நமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப்படக் குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000

உலகமெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். அதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கட்டில் திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

Related posts