#Bigil Movie Review By #JackieSekar

ஒரு திரைப்படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள்.

முழுநீள ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக எடுத்து இருந்திருந்தால் இந்த படம் இன்னும் ரசிக்கப்பட்டு இருக்கும்…

எனக்கு தெரிந்த ராயப்பன் கேரக்டரை பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடித்திருந்தால் இன்னும் ரசிக்கப்பட்டிருக்கும்…

ராயப்பனை போலீஸ் அழைத்து பேசுவார்கள்… தளபதி டயலாக் தேவர்மகன் டயலாக் எல்லாம் வருகிறது..

கமர்சியல் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான் ஆனால் மைக்கேலின் அடியாட்கள் டெல்லி முதல்வரின் கான்வாய் மேல் காரால் மோதுகிறார்கள்..

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் ஜீப்பினை வெடிவைத்து தகற்கிறார்கள்… டெல்லி போலீஸ் கைகட்டி அவரை வழி அனுப்பி வைக்கிறது…

ஃபுட்பால் டீமில் திருமணத்துக்கு பிறகு ஃபுட்பால் விளையாட கணவனால் மறுக்கப்படுகிறார்
ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனை… காரணம்… குட்டி டவுசர் போட்டு எங்கள் வீட்டுப் பெண் விளையாடக்கூடாது என்பது … ஆனால் அந்த பெண் டெல்லி செல்லும் முன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து கிளம்புகிறார்…

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்துவிட்டு எந்த காலை முதலில் எடுப்பது என்று திரைக்கதையில் குழம்புவது தெரிகின்றது…

படம் முடியும்போது இந்த கதைக்கு இவ்வளவு அக்கப்போரா ? என்று கேள்வி தோன்றுவதை மறக்க முடியவில்லை

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

#பிகில் திரை விமர்சனம்

#BigilReview #BigilFDFS #Vijay #BigilMovieReview #Nayanthara #Vivek #JackieShroff #Kathir
#YogiBabu #BigilPublicReview #BigilDiwali #BigilFromToday #பிகில்மக்கள்கருத்து #பிகில்திரைவிமர்சனம் #பிகில்விமர்சனம்

https://youtu.be/ykJ61sG_EXM