அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்
சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.

அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான்
இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச்சரியாக சித்தரிக்கும் ஆற்றல் பெற்ற சீயான் விக்ரம் இப்படத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான் உடன் இணைவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, பல சுவாரசியமான கதாபாத்திரங்களைக் உருவாக்கிய பெருமையைப் பெற்றவர்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் மிக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக திகழும் சீயான் விக்ரம் 58, இர்பான் பத்தானின் வருகையின் செய்திக்குபின் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சீயான் விக்ரம் 58 பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற கலைஞர்களின் விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Related posts