இணையத்தில் கால் பதிக்கும் பிரபல பதிப்பகம்

எழுத்து கலையின் உன்னதம் ஒரு மனதின் எண்ணங்கள் எழுத்தாக பெருகுவதும், அந்த எண்ணங்கள் பலரால் படிக்கப்பட்டு அங்கீரகப்படுவதும் இந்தக் கலையின் உச்சம் எனலாம்.

புதிய சிந்தனைகளும், வல்லமை கொண்ட கலைச்சொற்களும் மட்டுமே ஒரு சிறந்த எழுத்தாளனை உருவாக்கிட முடியாது. ஒரு சிறந்த பதிப்பக வெளியீட்டு நிறுவனம் அந்த எழுத்தை வெளிச்சத்தின் உச்சிக்கு கொண்டு வந்து விடும்.

கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ThinkInk பதிப்பகம் திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டு , அவர்களின் திறமையை வெளிசத்திற்கு கொண்டு வரும் வேலையை ஆத்மார்த்தமாக செய்து வருகிறது.

மாறி வரும் சூழலில் இளைஞர்களின் மாற்றத்தை கவனத்தில் கொண்டு புதிதாக உருவாகும் எழுத்தாளர்களுக்கு ஒரு வாசலை அமைத்துக்கொடுக்கிறது இந்தப் பதிப்பகம். 50 எழுத்த்தாளர்கள், 15க்கும் மேறபட்ட தலைப்புகள் இந்தியா முழுதும் பல்வேறு புத்தக நிறுவனங்களுடன் இணைந்து வெளியீடு என தன் துறையில் வெற்றியை நாட்டி வரும் இந்நிறுவனம் தற்போது இணையத்தில் தங்களுக்கென Youtube Channel ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நிறுவன இயக்குநர் சந்திரிகா விஜய கார்த்திகேயன் கூறியதாவது…

எங்களது முக்கிய குறிக்கோள் இக்காலத்திய இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தையும், அருமையையும், எடுத்துரைப்பதும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடத்தில் உண்டாக்குவதுமாகும். இந்த Youtube தளம் அதற்கு உதவிகரமாக இருக்குமென நம்புகிறோம். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தும் வழியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பணிக்கும் இந்தத் தளம் மிகுந்த உதவிகரமானதாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Touch Me Not (குட் டச், பேட் டச் )எனும் குறும்படம் இணையத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. மேலும் தமிழ் நாடு காவல்துறையிடமிருந்தும் பாரட்டுக்களை பெற்றது. இக்குறும்படத்தின் இயக்குநர் ஹரி பிரசாத் …
நான் தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட குறும்படங்களை பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக உருவாக்கி வருகிறேன். இப்போது புதிதாக பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு கலையை மையமாக கொண்டு The Art Of Parenting படத்தினை உருவாக்கிவருகிறேன் என்றார். இது குழந்தைகள் மேல் நாம் காட்ட வேண்டிய அக்கறையை எடுத்துச் சொல்வதாக இருக்கும். இதனை ThinkInk நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் மகிழ்ச்சி என்றார்.