தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார் !

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார் .. அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .
மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. இவர் தாமிரபரணி , படிக்காதவன், வேங்கை , வீரம் , பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார் . இவரது 6வது படமான சங்கதமிழன் படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது