பெண்களின் ஆதரவு குரலாக உருவாகும் ‘புயலில் ஒரு தோணி’..!

B.G.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லையா மற்றும் மஜீத் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண்,கோபிகிருஷ்ணன் & ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஜலீல் இயக்குகிறார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ்  ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
“பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகிறது” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜலீல்.

Related posts