மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? – வைரமுத்து

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம், சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித்தமிழர் பேரவையினர் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் , பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களைச் சொல்லச்சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் பின்மொழிந்தார்கள், விழாவில் திருவள்ளுவர் திருநாள் செய்தியாகக் கவிஞர் வைரமுத்து ஊடகங்களோடு பேசியதாவது: “உலகத்தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப்பழக்கம் என்பது…

Read More