விஷாலின் ‘அயோக்யா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

தற்போது விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது . அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத் , விசாகபட்டினம்  தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது . இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால். 
 
 தெலுங்கில் அனைவரின் மனதையும்  கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்  சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து  வருகின்றனர். 
 
தொழில் நுட்ப கலைஞர்கள் – இசை – சாம் CS, ஒளிப்பதிவு – VI கார்த்திக், கலை – SS மூர்த்தி, படத்தொகுப்பு – ரூபன், சண்டைப்பயிற்சி –  ராம் லக்ஷ்மன், நடனம் – பிருந்தா ஷோபி, உடை உத்ரா மேனன், பாடல்கள் – யுகபாரதி-விவேக், மூலக்கதை – வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு மேற்பார்வை – முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆண்டனி சேவியர்.
 
ஜனவரி 2019-ல் ‘அயோக்யா’ உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

Related posts