Ghajinikanth Movie Review

2015 தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான பல்லே பல்லே மகாதேவோய் திரைப்படத்தின் அபிஷியல் ரிமேக்தான் கஜினிகாந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் இது..

ஆர்யாவுக்கு பாஸ்என்கிற பாஸ்கரன் , ராஜாராணி போன்ற சாதாரண நக்கல் விடும் கேரக்ட்ர்கள் அல்வா சாப்பிடுவது போல அசத்தி நடித்து விடுவார்.. கொஞ்சம் பர்பாமென்ஸ் என்றால் எல்லாத்துக்கு ஒரே மாதிரியான ரியாக்சன் கொடுத்து விடுவார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.

இந்த படத்தில் சிங்கிள் டேக்கிள் கிளைமாக்ஸ் முன் டைனிங் டேபிளில் அசத்தி இருக்கின்றார் ஆர்யா..

சாயிஷா வாரத்துக்கு ஒருபடம் ரிலிஸ் ஆவது எல்லாம் வரம்… கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, இப்ப கஜினிகாந்த்

பரதநாட்டிய காஸ்ட்யூமில் செமையாக இருக்கின்றார் மிக முக்கியமாக சின்ன சின்ன உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்…

படம் முடியும் போது ஏ பிலிம் பை என்பதை யூவாக மாற்றி தான் யூ படங்களையும் இயக்குவேன் என்று சந்தோஷ் நிரூபித்து இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்கள் போகின்ற போக்கில் வந்து செல்வது நன்றாகத்தான் இருக்கின்றது…

படத்தின் முடிவில் புளுபர்ஸ் முழுவதும் பார்த்து விட்டு வயிறு எரிந்து வருமாரு கேட்டுக்கொள்கிறேன்…

சாய்ஷாவுக்கு ஆர்யா முத்தம் கொடுக்கின்றேன்… என்று எத்தனை ரிடேக்யா… அநியாயம் .. வெர்டிஜின் பசங்க சாபம் சும்மா விடாதுய்யா…

காமெடி பேமிலி எண்டர்டெயின்ட்மென்ட்… கேள்வி கேட்காமல் சிரித்துவிட்டு வருபவர்களுக்கான திரைப்படம் இது.. பி அண்டு சீயில் இடைவேளைக்கு பிறகு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் போங்கள்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

https://www.youtube.com/watch?v=y-bM8X-z8ME