Junga Movie Review

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் ஒன்று சேர்ந்து இருக்கும் படம் என்பதால் எப்படியும் காமெடி ஜானரில் கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..

கண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா சென்னையில் ஒரு தியேட்டர் நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்… அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.

காமெடியில் செமையாக விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு பின்னி இருக்கின்றார்கள்.. முக்கியமாக இரண்டு பேர் அசத்தி இருக்காங்க.. ராதராவி காட்பாதர் போல வேஷம்… அதே போல சரண்யா சன்சே இல்லை… இன்னா ஸ்லாங் பின்னிட்டாங்க.. அதுவும் அந்த பிளாஷ்பேக்கை சொல்லும் போது… வாய்… அந்த பாட்டியும் செமையா அசத்தி இருந்தாங்க..

மடோனா செபஸ்டின் ஒரு பாடலுக்கு வந்தாலும் கொள்ளை அழகு .. மிளிரும் ஒரு அழகை இந்த பசங்க சத்யராஜ் கூட மீம்ல மிக்ஸ் பண்ண சில நேரத்து ஷாட்டுல அந்த முகத்தோட கம்பேர் பண்ண வச்சிட்டானுங்க…

https://www.youtube.com/watch?v=uIaRkK1m2KA