அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!

எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 அதன் முன் தயாரிப்பு பணிகளின் போது வெளியிட்ட ஒவ்வொரு அறிவிப்பும் உற்சாகத்தை தூண்டி விட்டுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒளிரும் நடிப்பு திறன் கொண்ட, நற்குணம் வாய்ந்த தனித்துவமான இரண்டு நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் நிச்சயம் சரியான தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஊடுருவக்கூடிய மற்றும் ஆழ்ந்த நடிப்பை வெளிபடுத்தும் கலைஞர்கள் படத்தில் நடிக்கிறார்கள். ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியிருக்கிறது, மிக விரைவாக படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனது புத்திசாலித்தனமான கதை சொல்லலால் அனைவரையும் ஈர்த்த பரத் நீலகண்டனின் நிபுணத்துவத்தை மொத்த படக்குழுவும் நம்புகிறது. தலைப்பு மற்றும் படத்தின் முதல் தோற்றம் விரைவில் வெளியிடப்படும்.

Related posts