Ronin 1998 Hollywood Movie Review

உயிரை கொடுத்து வேலை செஞ்சேன் மச்சான்…. இப்படி ஒரு டயலாக்கை நம்மில் நிறைய இடத்தில் கேட்டு இருப்போம்…. அப்படி உயிரை கொடுத்து வேலை செஞ்சு இருந்தா…? பேச அவன் இருக்கமாட்டான்….. ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம்?… அது எந்த அளவுக்கு பெண்டை கழட்டிச்சின்னு சொல்லத்தான் அந்த வாக்கிய பிரயோகம்……

பட் உயரைக்கொடுத்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்… அணுஉலைகளில், இராணுவத்தில், பாம்ஸ்குவார்டில் என்று கரணம் தப்பினால் எந்த நேரத்திலும் உயிர் போய்விடும் என்று தெரிந்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்…

மாபியா,உளவுத்துறை போன்றவற்றில் பல ரகசியங்கள் கட்டிக்காக்க பல உயிர்கள் பலி ஆகி இருக்கின்றன..உதாரணத்துக்கு உங்க கிட்ட ஒரு வேலை கொடுக்கின்றேன்.. அதாவது ஒரு சாதாரண சூட் கேசை காட்டி,இந்த சூட் கேஸ் உன் உயரே போனாலும் திருடு கொடுக்க கூடாதுன்னு சொல்லறேன்.. அதுக்கு நீங்க என்ன சொல்விங்க….? அதுக்கு உள்ள என்ன இருக்குன்னு கேட்பிங்களா? மாட்டிங்களா?? காரணம் உயிரே போனாலும்னு ஒரு வார்த்தையை வேற நான் உபயோகபடுத்தி இருக்கேன்… கண்டிப்பா கேட்பிங்க? அதுதான் மனிதமனம்….

நான் சூட்கேசில் என்ன இருக்கின்றது என்று சொல்லவில்லை என்றால் நான் சொன்ன வேலையை நீங்க செய்வீர்களா??? சான்சே இல்லை….

மச்சி அந்த பருப்பு ஒரு சூட்கேஸ் கொடுக்குமாம்? அதுல என்ன இருக்குன்னுகூட சொல்லாதாம்….ஆனா உயிரே போனாலும் அதை எதிரிங்க கிட்ட இருந்து பாதுகாக்கனுமாம்…. என்னய்யா நியாயம் இதுன்னு என்கிட்ட எதிரில் முனகாமல் பின் பக்கம் போய் முனகலாம்…

பட் இந்த சூட் கேஸ் எதிரிங்க கிட்ட சிக்காம கொண்டு போய் சேர்த்துடுன்னா? தலையால செஞ்சுமுடிக்க இந்த உலகத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள்….. அப்படி ஒரு சூட்கேஸ்ல ரொம்ப முக்கியமான ரகசியம் இருக்கு…ஆனா என்ன இருக்குதுன்னு தெரியாம ஒரு கேங் அதை காப்பாற்றுகின்றது…ஒரு கேங் அதை கொள்ளை அடிக்குது…..

#RONIN-1998 ரோனின் படத்தின் கதை என்ன???

முதலில் ரோனின் அப்படின்னா என்னன்னு நாம தெரிஞ்சிக்கனும் இல்லையா?? எந்த கலைக்கும் ஒரு குரு அவசியம்… அதே போல ஜப்பானின் சமுராய் கலைக்கு குரு மிகவும் முக்கியம்.. பட் குரு இல்லாமல் இருக்கும் சமுராய் குற்றசெயல்களில் ஈடுபடுபவரை சமுராய் என்று சொல்லாமல் ரோனின் என்று அழைப்பர்….

சாம் (ராபர்ட் டி நீரோ) வின்சென்ட் (ஜேன் ரீனோ) டெயர்டிரி (நடாஷா) என ஐந்து புரோபஷனல் பய புள்ளைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரு சூட்கேசை ஆட்டைய போடனும்…. அந்த சூட்கேசை ஆட்டையை போடனும்னா? என்ன என்னவெல்லாம் செய்யனும்னு சாம் தலைமையில் திட்டம் போட்டு அந்த சூட்கேசை கொள்ளை அடிக்கறாங்க… ஆனால் அதில் நம்பிக்கை துரோகம், கொலைகள், கார் துரத்தல்கள், என போய் கடைசியாக அந்த சூட்கேசை அபிட் விட்டார்களா? என்பதே மீதிக்கதை…

https://www.youtube.com/watch?v=Z0i7J64m3fA