Kaala Movie Review

காலா ரஜினி… தாராவி மக்களின் துயர் துடைக்கும் காட் பாதர்….காலா…
ஆனால் அந்த இடத்தை கார்பரேட்டுக்கு தாரை வார்க்க போராடும் நானே படேகர்.
இரண்டு பேரில் யார் ஜெயித்தார்கள் என்பதே காலா படத்தின் கதை..

முன்னாள் காதலியை பார்த்து தடுமாறும் ரஜினி மற்றும் நானா படேகரோடு காமினேஷன் காட்சிகளில் பின்னி இருக்கின்றார்கள். அதிலும் நானாவும் ரஜினியும் சந்திக்கும் அனைத்து காட்சிகளிலும் பின்னனி இசை சான்சே இல்லை…

ஈஸ்வரிராவ் இயல்பாய் நடித்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய வளவள என்று பேசுவது கொஞ்சம் எரிச்சலை தருகின்றது என்பதை மறுக்க முடியாது..

ஒரு பிரேம் வைத்தால் அதில் குறைந்த பட்சம் 20 பேர் அல்லது 30 பேர் இருக்கின்றார்கள்… அதுவே பிளஸ்சும் மைனசும் கூட…

சமகாலத்தில் அவர் பேசிய அரசியலை வைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை விமர்சிக்கலாம்.. ஆனால் அவர் பேசிய அரசியல் அவரது சொந்த கருத்து அது பற்றி வேறு பதிவுகளில் பேசலாம்..

ஒரு ஐந்தாறு காட்சிகள் அசத்தலான தாறுமாறான காட்சிகளில் மெட்ராஸ் ரஞ்சித் பிளாஷ்கட்டில் வந்து போகின்றார்… ஆனால் பெரும்பாலான காட்சிகள் பிரச்சார நெடி போல இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது..

கபாலி படத்தில் முதல் பதினைந்து நிமிடம் ரஜினி ரசிகர்கள் திரை அருகே ஆடிக்கொண்டு இருந்து பின் அமைதியானார்கள்… ஆனால் இந்த படத்தில் கைதட்டல் விசிலோடு மட்டும் பார்த்தார்கள்.

https://www.youtube.com/watch?v=DJnut8y7iGU