அமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்!

இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி. மோகன் தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.
ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

எஸ்.பி.மோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நான்கு தேர்ந்த எழுத்தாளர்கள் திரைக்கதையும், இரண்டு வசனகர்த்தாக்கள் வசனங்களையும் எழுதியுள்ளனர்.

திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவரவிருக்கும் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்றும் இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் தெரிவித்துள்ளார்,.

Related posts