தமிழக தியேட்டர்கள் மூடல் ? மக்கள் மனநிலை என்ன ?

தமிழக தியேட்டர்கள் வரும் 16 ஆம் தேதியில் இருந்து மூடல்….

வரும் மார்ச் 16 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் இயங்கி வரும் தியேட்டர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை நிறைவேற்றும் வரை மூட போகின்றார்கள்.

கோரிக்கை கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.. மூன்று வருடத்துக்கு ஒரு முறை லைசென்ஸ் புதுப்பித்தல் வேண்டும் போன்ற கோரிக்கைகள் என்றாலும் ஒரு போதும் அரசு செவிசாய்க்க போவதில்லை என்பது தெரிந்தாலும்

பொதுமக்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் தியேட்டரை மூடுங்கள் என்று ஒரே போடாய் போடுகின்றார்கள்.

தியேட்டர் டிக்கெட் மற்றும் பார்ப்கான், வாகன பார்க்கிங் கட்டண கொள்ளை என்ற அவர்கள் மனதில் ஒரு கோபம் இருக்கின்றது..

தியேட்டர் ஓனர்கள் இது குறித்து கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.. காரணம். படம் பார்க்க மக்கள் வந்தாக வேண்டும்.. மக்களிடம் இவ்வளவு வெறுப்புடன் இந்த தொழில் சிறப்பது என்பது ரொம்பவும் கடினம் என்பதுதான் உண்மை நிலை.

https://www.youtube.com/watch?v=Zu-kwU8Em_8