Heaven (2002) World Movie Review

பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை …

ஹெவன் படத்தின் கதை….
பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.

இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள்.

அவளை என்கவுன்டர் செய்ய அதிகார வர்கம் ஆவலாய் பறக்கிறது,அவளுக்கு மொழிப்பெயர்பாளனாக வரும்
FILIPPO – Giovanni Ribisi கதாநாயகன்அவளை காப்பாற்றுகிறான். அவளோடு அவன் காதல் கொள்கிறான். அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கிறார்கள்,அதன் பிறகு இருவரும் பிடரியில் கால் பட ஓடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் போலீஸில் மாட்டி க்கொண்டார்களா?அல்லது தப்பித்தார்களா? என்பதை ரொம்பவும் அற்புதமாக அலுப்பு தட்டாமல் சொல்லி இருக்கிறார்கள்..

இந்த படத்தின் இயக்குநர் Tom Tykwer, சட்டுன்னு பேரை சொன்னா தெரியாது… ரன் லோ ரன்., பர்பியூம் திரைப்படத்தை இயக்கியவர்ன்னு சொன்னதான் புரியும்.

https://www.youtube.com/watch?v=XgtTV8kgu04