ஜெர்மன் பெண் நேயரின் மொபைல் பரிசு

நானாவது மொபைல் புதுசா வாங்கறதாவது..

கடந்த மூன்று மாதங்கள் என் வாழ்வில் வைத்து செய்த மாதம் என்று சொல்லலாம்..
அண்ணே ஆயிரம் ரூபாய் பணம் இருக்க?? ஊருக்கு போறேன்… கேட்காத பையன் என்னிடத்தில் கேட்கிறான்… டேய் என்கிட்ட 500 ரூபாய்தான் இருக்கு… என்று சொல்லி முடிப்பதற்குள் தோ இப்பவே நேர்ல வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிட்டு பைக் எடுத்துக்கிட்டு வளசரவாக்கத்துல இருந்து மயிலைக்கு வரான்.. இருந்த 500 ரூபாயும் அவன்கிட்ட கொடுத்து சமாளிச்சது தனிக்கதை…

கேமரா அலெக்ஸ் வாங்கிதரேன் என்று சொன்ன அதே வேளையில் வாட்சப்பில் பீரித்தி என்ற ஜாக்கி சினிமாஸ் ஜெர்மன் பெண் நேயர் வாட்ஸ் அப் பண்ணி இருந்தார்.. மொபைல் கிப்ட் செய்கின்றேன்… என்னிடத்தில் வாங்க எந்த தயக்கமும் வேண்டாம் உங்கள் சகோதரியாக பாவித்து இந்த மொபைல் பரிசு பொருளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..

நான் மாடல் சொல்ல நேரம் எடுத்துக்கொண்டேன்… பீரித்தி எவ்வளவு விலை மொபைலாக இருந்தாலும் வாங்கி பரிசாக தர இருந்தார்… ஆனால் நான்தான் தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்க வேண்டாம் என்று ஆப்பிள் அது இது என்று நண்பர்கள் ஐடியா கொடுத்த போதும்.. கேமரா நன்றாக இருக்கும் அதே வேளையில் பட்ஜெட்டில் வி7 பிளஸ் மாடல் மற்றும் ஒப்போ மாடலை அவருக்கு அனுப்பினேன்.. உடனே வி7 பிளஸ் மாடல் இரண்டு நாட்களில் என் கைகளுக்கு வந்து விட்டது…

நன்றி ஜெர்மன் பிரீத்தி… மற்றும் மாடல் சஜெஸ்ட் செய்த அத்தனை நண்பர்களுக்கும்…

Related posts