Theeran Adhigaram Ondru Movie Review By Jackiesekar

ஒரு வழிப்பாறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்கு மூலம் என்று ஒரு புத்தகம்.. பிரிட்டிஷ் இந்தியாவில் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் தக்கிகள் என்ற ஒரு கொள்ளை கூட்டம் இருந்தது.. அவர்கள் மிக மோசமானவர்கள்… அவர்களை பிரிட்டிஷார் வேர் அறுத்தார்கள்…

அதை எல்லாம் ரொம்ப டிடெயிலாக இந்த திரைப்படத்தில் பார்க்கலாம்.

சதுரங்க வேட்டை திரைப்படத்துக்கு பிறகு அடுத்து அடுத்து என்று மள மள என்று படம் பண்ணாமல் இயக்குனர் வினோத் மீனுக்காக காத்து இருக்கும் கொக்கு போல கால் மாற்றி கால் மாற்றி காத்து இருந்து பிடித்த மீன்தான் தீரன் அதிகாரம் ஒன்று,.. சான்சே இல்லை… வினோத் நிச்சயம் வாசிப்பு அனுபவம் கொண்ட சுவாரஸ்யமாக உண்மை சம்பவங்களை கோர்த்து திரைமொழியில் ரசிக்க வைக்கும் இயக்குனர்தான் என்பதில் சந்தேகமே இல்லை..

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதை என்ன?

ஒரு போலிஸ் வாழ்வில் மறக்க முடியாத கேஸ் என்று ஒன்று இருக்கின்றது… அந்த கேஸ் எப்படி எல்லாம் கார்த்தி என்ற போலிஸ்காரனை அலை கழித்தது என்று மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கின்றார்கள்..

கார்த்தி சான்சே இல்லை… மிடுக்கும் நடையும் தவிப்பு அசத்தி இருக்கின்றார்…காற்று வெளியிடையில் அவருக்கு ரோமன்ஸ் வரவில்லை என்று குரல் கொடுத்தவர்கள் ராகுலோடு அவர் அடிக்கும் கொட்டத்தை பார்க்கையில் வாய் அடைத்து போவார்கள்.
ராகுல் பீரித் சிங்… சான்சே இல்லை.. இந்த படத்துக்கு பிறகு ஒரு ரவுன்ட் வர வாய்ப்பு இருக்கின்றது…

ரொமான்சில் கலக்கி இருக்கின்றார்… இப்படி எல்லாம் ஒரே ஒரு பெரிய வெள்ளை சட்டை மட்டும் அணிந்துக்கொண்டு தீரனுக்கு கிடைத்து போல ஒரு பொண்டாட்டி கிடைத்தால் வேலையாவது மயிராச்சி என்று போலிஸ் வேலையை ரிசைன் பண்ணி விட்டு வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தேன்… ஆனால் நினைத்ததை சொல்லி விட்டேன்.. இந்த வரியை படிப்பவர்கள் வீட்டுக்கு மொட்டைகடுதாசியில் இந்த வரிகைளை குறிப்பிட்டு எனது இரவு சாப்பாட்டுக்கு உலைவைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=5PEvyxIIPBQ