ஜாக்கிசினிமாஸ் நேயரின் கேமரா பரிசு

கேமரா பரிசளித்த ஜாக்கி சினிமாஸ் அமெரிக்க ரசிகர்.

யூ டியூப்ல ஒருத்தர் சேனலை பார்க்கறிங்க..

அந்த சேனல் ஒங்களுக்கு புடிக்குதுன்னா.. என்ன செய்விங்க… சப்ஸ்கிரைப் செய்விங்க…
அப்புறம் நல்லா இருக்கும் வீடியோவுக்கு வாழ்த்து சொல்வீங்க…

அதன் பிறகு என்ன செய்விங்க… போன் நம்பர் கிடைச்சா.. போன்ல பாராட்டுவீங்க. அல்லது திட்டுவிங்க.-..
அப்புறம்… உங்களை சந்திக்கனும்சார்ன்னு சொல்லி நேரம் கிடைக்கும் போது சந்திச்சி… நல்லா விமர்சனம் பண்ணறிங்கன்னு சொல்லுவிங்க….

அதிக பட்சம் அவ்வளவுதான் இல்லையா?
ஆமாம்…

போனவாரம் ரொம்ப நாளுக்கு அப்புறம் யூடியூப் லைவ்வுக்கு போனேன்..

அப்ப அலக்ஸ் அலகேஸ்ன்ற பையன்.அவன் தேனி பக்கம்.. அமெரிக்காவுல செப்பா இருக்கான்… புரோ நான் உங்களுக்கு ஒரு கிப்ட் பண்ணணும்ன்னான்..

ஏன்டான்னு கேட்டேன்..

நீங்க நல்லா பண்ணறிங்க ஆனா சப்ஸ்கிரைப் இல்லை… ஆனாலும் உங்க ஹானஸ்ட் ரிவியூவுக்கு நான் கிப்ட் செய்யனும்ன்னு நினைக்கறேன்னு சொன்னான்..

ஏதோ கலாய்க்காறன்னு நினைச்சி.. இப்போதைக்கு ஒரு கேமரா வேணும்… இருந்தது எல்லாம் ரிபேர் ஆச்சின்னு சொன்னேன்.. நோ பிராப்ளம்ன்னு சொன்னவன்… ஏதோ விளையாட்டா சொல்றான்னு நினைச்சா.. மெயில்ல வந்து ஷிப்பிங் பண்ண வீட்டு அட்ரஸ் கொடுங்க புரோன்னு சொல்றான்..

கேமரா 350 டாலர் ஷிப்பிங் சார்ஜ் ஒரு 200 டாலர் எல்லாம் சேத்து நம்ம ஊர் பணத்துக்கு 40 ஆயிரம் 38, அல்லது 40 ஆயிரத்துக்கு வரும்….

நான் இன்னும் கம்பியான மாடல் ஹேண்டி கேம்தான் சொன்னேன்.. அவன்தான்… இந்த கேமராவை வாங்கி அனுப்பிச்சான்..

யாருகிட்டயாவது கொடுத்து அனுப்புன்னு சொன்னா. இல்லை புரோ உங்களுக்கு இப்ப ரொம்ப அவசியம் இதுன்னு 200 டாலர் ஷிப்பிங் சார் பத்தி கவலைப்படாம வாங்கி அனுப்பினான்.. அதுவும் ஒன்பது நாள்ல வந்துடுச்சி..

அதை டெய்லி டிராக் பண்ணி எனக்கு மெசேஜ் அனுப்பி சான்சே இல்லை..

நான் ஏதோ ஒரு விஷயத்தை சரியா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சுது..
எந்த கவர்ச்சியும் இல்லாம தலையில் முடிகொட்டி போய் வழுக்க தலையோட ஸ்கீரின்ல பேசறவனுக்கு என்னதான் கன்டென்ட் இருந்தாலும் ஸ்கீரின் பிரசன்ஸ் விஷுவல் மீடியத்துக்கு ரொம்ப முக்கியம் .. ஆனாலும் யாரோ ஒரு தம்பி மனசுல இடம் புடிச்சி இருக்கேன் என்பதே எனக்கு சந்தோஷ்ம்… எனக்கு இந்த கேமரா பரிசு பெரிய உந்து சக்தி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

நன்றி அலெக்ஸ் அலகேஸ்….மற்றும் ஜாக்கிசினிமாஸ் நேயர்களுக்கு இந்த ஜாக்கியின் அன்பும் பேரன்பும்

வீடியோவில் இன்னும் விரிவாய்…

Related posts